அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய குபேர மந்திரம்..நம்பிக்கையோடு உச்சரித்தால் செல்வ வளம் பெருகும்
சென்னை: அட்சய திருதியை அற்புதமான நாள். இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியை வழிபடுவார்கள். குபேரனை போற்றி வணங்குவார்கள். அட்சய திருதியை நாளில் குபேரனை வணங்கி நாம் சொல்ல வேண்டிய மந்திரங்களைப் பார்க்கலாம்.

குபேரன் மூல மந்திரம்:
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:
குபேரன் துதி:
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்
ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின் அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக என்பது இதன் பொருளாகும்.
ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.
குபேர காயத்ரி :
ஒம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்...
குபேரனின் தியானம்:
மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
ஓம் .....ஹ்ரீம்....க்ளீம்சௌம்.....ஸ்ரீம்......கும் குபேராய......
நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே...
லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்... ஓம்... குபேராய நமஹ.
வெள்ளிக்கிழமைகளிலும் அட்சய திருதியை நாளிலும் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
108 குபேரா போற்றி போற்றி
நோய்கள் நீக்கும் மந்திரம்: நாம் சம்பாதிக்கும் செல்வத்தை அனுபவிக்க நமக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும். எனவே அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூரணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிடைக்கும். "ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சந்தி குரு குரு ஸ்வாஹா" என்ற அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உச்சரிக்கலாம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரியே அமிர்தகலச ஹஸ்தாய
சர்வ ஆமய நசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா"
என அட்சய திருதியை நாளில் தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம், மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications