குபேர மூலையில் மறந்தும் சில தவறுகளை செய்யாதீர்கள்.. வீட்டில் செல்வம் தண்ணீராக செலவாகுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாஸ்து வளம் தரக்கூடியது. நம்முடைய வீட்டில் உள்ள மூலைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்து நேர்மறை எண்ணங்களும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும். ஈசான்ய மூலை சுத்தமாக இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே போல குபேர மூலையில் நாம் செய்யும் சிறு தவறு கூட நம்முடைய செல்வ வளத்தை வற்றச்செய்து விடுமாம்.

குபேரன்: திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியை செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே நாம் வணங்க வேண்டும். குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று. குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

Kubera Moolai vastu tips: What can you do to increase the wealth at home

எதிர்மறை ஆற்றல்: சிலர் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். பணத்தை எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதை சேமிக்க முடியாது. செல்வம் பல வழிகளில் கரைந்து போகும். எனவே வீட்டில் வாஸ்து படி என்ன தவறு இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சிலர் தவறான திசையில் பணம் வைக்கும் பீரோவை வைத்திருப்பார்கள். அதுவே எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

குபேர மூலை: வீட்டின் தென்மேற்குச் சார்ந்த மூலையை நைருதி மூலை என்றும் குபேர மூலை என்றும் சொல்வார்கள். தெற்கும் மேற்கும் சந்திக்கும் இந்த மூலையை கன்னி மூலை என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூலையில் பணம், நகை வைக்கும் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

செல்வம் சேரும் குபேர மூலை: பணம் விரைய செலவு ஆகாது. தேவையான செலவுகளை மட்டுமே செய்ய வைக்கும். நாம் சம்பாதித்து சேர்த்த பணத்தை சேர்த்து வைப்பதற்கு சிறந்த இடம் நம்முடைய தலைமை படுக்கை அறை அமையும் தென்மேற்கு மூலைதான். இதுதான் குபேர மூலை என்று சொல்கின்றனர். குபேரன் செல்வத்திற்கு அதிபதி என்பதால் நாம் செல்வத்தை பத்திரமாக குபேர மூலையில் வைப்பது சிறந்தது.

விரைய செலவாகும்: வடமேற்கு மூலையான வாயு மூலையில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருக்கும் கொஞ்சம் கூட சேமிக்க முடியாமல் போய் விடும். தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் பணப்பெட்டி, பீரோ வைத்தால் வீண் விரயச் செலவுகள் வரும். அதே நேரத்தில் கொடுத்த பணம் திரும்ப வரவே வராது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

தென் மேற்கு மூலை: அதே நேரம் தென் மேற்கு மூலையில் வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியையும் தொழில் வியாபாரத்தில் லாபத்தையும் தரும். தென் மேற்கு பகுதி தான் ஒரு இடத்தின் ஆற்றல் மூலையாக கருதப்படுகின்றது. இதனால் எந்த ஒரு கட்டடம் கட்டினாலும் அதன் தென் மேற்கு பகுதியில் எந்த ஒரு வாசலோ அல்லது திறக்கும் இடமோ வைக்கக் கூடாது. அப்படி செய்தால் நம் வீட்டில் ஆற்றல் வெளியேறும் என நம்பப்படுகிறது.

நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்: வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு தென்மேற்கு திசையில் பீரோவை வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால், அதற்கு பதில் வாயு மூலை அதாவது வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் பீரோவை வைக்கலாம். இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

வீட்டில் குடியேற வேண்டாம்: தென் மேற்கு மூலையில் படுக்கையறை அமைப்பது நல்லது. அந்த மூலையில் படுக்கையறை இருப்பது வாஸ்து முறைப்படி ஆரோக்கியத்தை அதிகரிக்கும், கணவன் மனைவி இடையே நல் உறவை மேம்படுத்தும். தென்மேற்கு மூலையில் கழிவறையோ அல்லது கிச்சனோ இருந்தால் அத்தகைய வீடுகளில் கண்டிப்பாக குடியேற வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+