கோடீஸ்வர யோகம் தரும் குபேர முத்திரை.. மலையாக செல்வம் குவிய இந்த பூஜை செய்யுங்கள்.. ஆன்மீக டிப்ஸ்
சென்னை: குபேரனின் கடைக்கண் நம் மீது விழாதா? அன்னை மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்காதா என்று பலரும் ஏங்கித் தவிக்கின்றனர். குபேரன் மகாலட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறார். குபேரனிடம் பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்கநிதி, நீலநிதி, பத்மினிநிதி எனும் நவநிதிகளுக்கு அதிபதியான குபேரனை வசியம் செய்ய குபேர முத்திரை செய்வது அவசியமாகும்.
லட்சுமி செல்வம்: பாற்கடலில் அவதரித்தவர் அன்னை மகாலட்சுமி. மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும். லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

குபேர செல்வம் : குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். இலங்கை அரசன் ராவணனுக்கு சகோதரன் குபேரன். அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார். குபேரனை ஒருவர் மனமுருகி வேண்டினால் குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். ஜாக்பாட் மூலமாகவும், லாட்டரி, பங்குச்சந்தை மூலமாகவும் சொத்துக்கள் சேரும்.
வடக்கு திசை: செல்வத்திற்கு அதிபதியான குபேரன், வடக்கு திசையின் அதிபதி. குபேரனை அழகாபுரி வேந்தனாக நியமித்து, இவருக்குச் சங்கு நிதி, பதும நிதி, யோக நிதி ஆகியவற்றை வழங்கினார். சங்க நிதி என்பது சங்கிலிருந்து ஒழுகும் நீரைப் போல தினசரி கிடைக்கும் செல்வத்தைக் குறிப்பிடுகிறது. பதும நிதி என்பது தாமரை (பதுமம் என்றால் தாமரை என்று பொருள்) மலர்களைப் போல் அடுக்கடுக்காக இருப்பதைப் போல் அடுத்தடுத்துச் செல்வம் கிடைப்பதைக் குறிப்பிடுகிறது. யோகநிதி என்பது எதிர்பாராது திடீர் என்று கிடைக்கும் செல்வத்தைக் குறிப்பிடுகிறது.
குபேர வழிபாடு: குபேரன் என்ற வார்த்தை குபேரா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான குபேரனை அட்சய திருதியை நாளிலும் தீபாவளி நாளன்றும் வணங்குவார்கள். குபேரனுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் பூச நட்சத்திர நாளிலும் வணங்கலாம். வியாழக்கிழமை நாளிலும் வெள்ளிக்கிழமை அன்றும் அமிர்தயோகம் அல்லது சித்தயோகத்திலும் பூஜை செய்வது சிறப்பாகும். குபேரனுடைய படத்தை வைத்து அத்துடன் முறையான குபேர எந்திரத்தை வைத்து பூஜை செய்யலாம்.
பால் பாயாசம்: குபேரனுக்கு கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருள்கள் சேர்த்த பால் அல்லது பால் பாயாசத்தையோ படைத்து வணங்க வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு இதைப் பலருக்கும் பிரசாதமாகக் கொடுக்கலாம். இனிப்பு பலகாரங்களை படைத்து குபேரனை வணங்குவதுண்டு. குபேரனை வணங்குவதால் பொருளாதார பிரச்சனைகள் தீரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்படையும். குபேரனை வணங்கும் பொழுது வெள்ளி,தங்கம் மற்றும் நாணயங்களை முன் வைத்து வணங்கலாம்.
குபேர முத்திரை: பொதுவாக குபேரனை தியானம் செய்யும்பொழுது குபேர முத்திரை இட்டு செய்வது மிகவும் சிறப்பாகும். குபேர முத்திரை என்பது பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களை ஒன்று சேர்த்து, மீதமிருக்கும் இரண்டு விரல்களை மடித்து வைக்க வேண்டும். இந்த முத்திரையைச் செய்து வணங்குவதால் தன்னம்பிக்கை பெருகி பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என்கின்றனர்.எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications