கும்பகோணம் நவகிரக சுற்றுலா.. உற்சாகமாக கிளம்பிய பயணிகள்.. ஒரே நாளில் 9 கோவில்கள் தரிசனம்
சென்னை: கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து இன்று முதல் தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் ஒரே நாளில் 9 தலங்களை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் உற்சாகமாக ஆன்மீக சுற்றுலாவிற்கு கிளம்பியுள்ளனர்.
கும்பகோணத்தை சுற்றி நவகிரக தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிகாரங்களுக்காக நவகிரக தலங்களுக்கு சென்று வருகின்றனர். அருகில் உள்ள ஆலயங்களுக்கும் செல்கின்றனர். இதற்காக தனித்தனியாக பஸ், ஆட்டோ, கார் மூலம் பயணம் செய்வதால் அதிக செலவாகிறது.

கும்பகோணம் மற்றும் அதைசுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பேருந்தில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பது பயணிகள், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதை ஏற்று, நவக்கிரக சுற்றுலா சிறப்பு பேருந்து இயக்கம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிதார். அதன்படி இன்று முதல் நவகிரக சுற்றுலா பேருந்து அதிகாலையிலேயே கிளம்பியுள்ளது.
மாசிமகம் என்பதால் நேற்று முதலே ஏராளமானோர் கும்பகோணத்திற்கு வந்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகளுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு நவகிரக சுற்றுலாவிற்கு கிளம்பினர். திங்களூர் சந்திரன் கோயில், ஆலங்குடி குரு பகவான் தரிசனம் முடிந்து காலை உணவுக்காக இடைவேளை விடப்பட்டது.
காலை 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 10 மணிக்கு சூரியனார்கோவில் சூரிய பகவான் தரிசனம் முடிந்து பக்தர்கள் 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோயில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் கிரக தரிசனத்துக்கு பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்.
பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோயில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழபெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், 4.45 மணிக்கு திருநள்ளாறு சனி பகவான் கோயிலுடன் தரிசனம் நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் பேருந்து மீண்டும் கும்பகோணம் வந்தடையும்.
நவக்கிரக சுற்றுலாவுக்கு பயண கட்டணம் ரூ.750 ஆகும். இத்தலங்களை காரில் சென்று தரிசிக்க வாடகையாக மட்டும் குறைந்தது ரூ.6,500 செலவிட வேண்டிய நிலையில், பேருந்துக்கு குறைவான கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் நவகிரக சுற்றுலா பேருந்து இயக்கப்படும். இந்த பேருந்தில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications