Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த 1 பொருள் பூஜை அறையில் வைத்தால் போதும்.. பூஜையறையில் கண்ணாடி வைக்கலாமா? சூப்பர் வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைப்பதுடன், ஒவ்வொரு நாளும் பூஜையறையை பராமரிப்பது அவசியமாகும்.. குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், பொருளாதாரமும் பெருக வேண்டுமானால், சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைத்திருக்ககூடாது? என்ன பொருளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து முன்னோர்கள் விரிவாகவே சொல்லி வைத்துள்ளனர். அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பூஜை அறையிலுள்ள சாமி படங்கள் வடக்கு திசை அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். இஷ்ட தெய்வங்கள், குலதெய்வங்கள் படங்களை எப்படியும் வைத்து கொள்ளலாம்.. இதில் இறந்தவர்களின் போட்டோக்களை வைக்கக்கூடாது.

Spirituality Pooja Room vastu tips

செம்பு பாத்திரங்கள்

பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் செம்பு பாத்திரத்தை காலியாக வைத்திருக்க கூடாது.. பூஜை முடிந்தாலும், நீரை நிரப்பி, துளசி இலை இரண்டு அல்லது மூன்று போட்டு வைக்கலாம். அல்லது வாசனை பூக்களை போட்டு வைக்கலாம்.. வெறும் பாத்திரம் குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்.

அதேபோல பூக்களை போட்டு வைத்திருக்கும் பாத்திரம் காலியாக இருக்கக்கூடாது.. அப்படியே அந்த உலோகத்தில் பூக்கள் இருந்தாலும், அது வாடிவிடாமல் இருக்க வேண்டும். பூக்கள் வாடும் முன்னேயே கடவுள் படங்களுக்கு புதிய பூக்களை சூட்டிவிடவேண்டும்.

உடைந்த பொருட்கள், இரும்பு

பூஜையில்லாத நேரத்தில் பூஜையறையை ஸ்கிரீனால் மறைக்க வேண்டும். பூஜைக்கு தேவைப்படாத பொருட்கள் எதுவுமே அந்த அறையில் வைத்திருக்கக்கூடாது. தேவையற்ற குப்பை, உடைந்த பொருட்களை சேர்த்து வைக்க கூடாது..
வாடிய பூக்களை, இலைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். பூஜை அறையில் சமைத்த உணவையும் வைக்க கூடாது.. சாப்பிடவும் கூடாது.. வீட்டில் யாராவது இறந்துவிட்டால், துக்க காலத்தில் பூஜைறையில் வழிபாடு செய்யக்கூடாது.

அதேபோல, எப்போதுமே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது.. பூஜையறையிலும் வைக்கக்கூடாது.. யமனுக்கு உரிய உலோகம் என்பதுடன், நேர்மறை சக்திகளை ஈர்த்து கொள்ளும் திறன் இரும்புக்கு மிகவும் குறைவாகும்.. எனவே., இரும்பு தவிர, வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜை பொருட்களையே பயன்படுத்தலாம்.

என்னென்ன வைக்கலாம்

எப்போதும் பூஜையறையில் சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்திருப்பதுபோல, அரிசி, பருப்பு போன்ற பொருட்களையும், சுவாமி படங்களுக்கு முன்பு நிரப்பி வைத்து பூஜிக்கலாம்.. குறிப்பாக பிள்ளையாரின் பாதத்தில் சிறிது அரிசி போட்டு வைத்திருப்பதால், குடும்பத்தில் வறுமை நெருங்காமல் இருக்கும்.

வெள்ளி அல்லது செம்பு விளக்குகள் பயன்படுத்துவதால் தெய்வீக அதிர்வுகள் அதிகரிக்கும் என்பார்கள். வடகிழக்கு திசையில் சிறிய நீரூற்று அல்லது மீன் தொட்டி வைக்கலாம்..

கண்ணாடிக்கு தூபம்

பூஜையறையில் மகாலட்சுமி வாசம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிற கண்ணாடியை வைக்க வேண்டும். பூஜை நேரத்தில், கண்ணாடிக்கும் தீப, தூப ஆராதனை காட்டி அதன்பிறகே பூஜையை துவங்க வேண்டும். பூஜை செய்யும் நபருக்கு வலப்பக்கத்தில் அகல் விளக்கு, ஊதுவத்தி இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறையாவது, வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூஜை செய்ய வேண்டும்.. ஊதுபத்தி எப்போதுமே 2 ஊதுபத்தியாக ஏற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறையாவது, வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்ட வேண்டும்.. கடவுளுக்கு வைக்கும் சந்தனம், குங்குமம் தனியாகவும், நாம் நெற்றியில் வைத்துக் கொள்ளும் சந்தனம், குங்குமம் தனியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+