முன்ஜென்ம பாவங்கள் போக்கும் மகா சிவராத்திரி..களைகட்டும் ஸ்ரீ காளஹஸ்தி..19ல் தேரோட்டம்

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13ஆம் தேதி முதல் 25ஆம்தேதி வரை காளஹஸ்தியில் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

காளஹஸ்தி: மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா காளஹஸ்தி சிவன் கோயிலில் களைகட்டியுள்ளது. காளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன
சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் இந்த ஆண்டு வரும் 13ஆம் தேதி முதல் 25ஆம்தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Maha Shivratri 2023 Car festival at Srikalahasti temple on 19th February Maha Shivratri 2023 Car festival at Srikalahasti temple on 19th February

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.

திங்கட்கிழமையன்று சதுர்த்தசி திதி பகலும், இரவும் 60 நாழிகைகள் சேர்ந்து வந்தால், அது யோக சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியை இவ் வருடம் வருகிறது. அதாவது,யோகியர் மறந்திடாத சிவராத்திரி ஆகும். அனைவரையும் யோகிகளாக மாற்ற கூடிய சிவராத்திரி.

மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர். இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது.

சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

மகாசிவராத்திரி பண்டிகை ஸ்ரீகாளஹஸ்தியில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் 13ஆம் தேதி காலை காளஹஸ்தி சிவன் கோயில் அருகே உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில், பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் வகையில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்ட உள்ளது. இதனை தொடர்ந்து, மறுநாள் 14-ம் தேதி சிவன் கோயில் முன் உள்ள தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது.

Maha Shivratri 2023 Car festival at Srikalahasti temple on 19th February Maha Shivratri 2023 Car festival at Srikalahasti temple on 19th February

இதனை தொடர்ந்து, தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஞானப்பூங்கோதை தாயார் சமேத காளத்தீஸ்வரரின் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதில் முக்கிய நாட்களாக பிப்ரவரி 14ஆம் தேதி கொடியேற்றம், 18ஆம் தேதி மகா சிவராத்திரியையொட்டி, நந்தி வாகன சேவை மற்றும் இரவு லிங்கோத்பவ தரிசனம், 19ஆம் தேதி காலை தேர்த்திருவிழா மற்றும் அன்றிரவு தெப்போற்சவம், 20ஆம் தேதி இரவு சிவ-பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். 22ஆம் தேதிசுவாமி கிரிவலம், 23ஆம் தேதி கொடியிறக்கம், 24ஆம் தேதி பூப்பல்லக்கு சேவை, 25ஆம் தேதி ஏகாந்த சேவை நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, காளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் கோபுரங்கள் எல்லாம் மராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கோயில் முழுவதும் வண்ணக் கோலங்கள் போடப்பட்டு விழாகோலம் பூண்டுள்ளது. சுவர்ண முகி நதிக்கரையோரம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பதியிலிருந்து பிரம்மோற்சவத்திற்கு வந்து செல்ல கூடுதல் ஆந்திர அரசு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+