மகத்துவம் நிறைந்த மார்கழி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் வர என்னென்ன நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்கழி மாதம் பவுர்ணமி அற்புதமான நாள். இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவதால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

Margazhi Tiruvathirai Devotees going to Tiruvannamalai Check the Good Time to go to Pournami Girivalam

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

செவ்வாய்கிழமை நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர கடன் பிரச்சினை தீரும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும்.

சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன் என்பதாலேயே பவுர்ணமியில் மனிதர்களின் மனதைப் போல கடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெள்ளிக்கிழமை பவுர்ணமி வருவது கூடுதல் சிறப்பம்சம். கிரக தோஷங்களை நீக்கவும், பில்லி சூனியம் ஏவல் போக்கவும் பவுர்ணமி வழிபாடு அவசியம். அம்மனை வழிபடுவதோடு சத்யநாராயணரை வழிபடுவதும் கூடுதல் சிறப்பம்சம்.

மார்கழி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் பௌர்ணமி இன்று 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:30 மணியளவில் துவங்கி, இன்று நள்ளிரவு 11:55 மணிக்கு நிறைவடைகின்றது. எனவே 26 ஆம் தேதி திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மார்கழி திருவாதிரை தினம் சிறப்பு வாய்ந்த நாள் நாளைய தினமும் கிரிவலம் வரலாம். அண்ணாமலையால் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. அங்கு மலைமீது ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட மை பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மலையை சுற்றி கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறியுள்ளனர்.

பௌர்ணமி கிரிவளத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பௌர்ணமி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+