தீராத கடன் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம்.. விரதமிருந்து வணங்கினால் என்னென்ன நன்மைகள்
சென்னை: ருண விமோசன பிரதோஷம் செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் அபிசேஷகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தரிசனம் செய்ய தீராத கடனும் தீரும் என்பது நம்பிக்கை.
தோஷம் நீக்கும் சிவ வழிபாடு: சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம் என ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் வருகின்றன. இன்று கிருஷ்ண பட்ச பிரதோஷம். தேய்பிறை பிரதோஷம். பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

கடன் தீர்க்கும் பிரதோஷம்: செவ்வாய்கிழமை நாளைய தினம் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சிவ தரிசனம் செய்வதால் மனிதனுக்கு வரும் ருணம், கடன் தொல்லை, எதிரி தொல்லைகளை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை.
சிவ தரிசனம்: பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் போன்றவை விலகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சோம வாரப் பிரதோஷ விரதமும் சிவ தரிசனமும் வாழ்வில் ஒளியேற்றும். நம்முடைய வம்சத்தை விருத்தியாக்கும். வளமும் நலமும் தந்து வாழச் செய்யும்.
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம்: மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும். இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது.
தோஷங்கள் நீங்கும்: 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
எந்த நாளில் தரிசனம்: ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம் என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம் அல்லது ருண விமோசன பிரதோஷம் ஆகும். புதன்கிழமை வரும் பிரதோஷம் புதவாரப் பிரதோஷம் என்றும், வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவாரப் பிரதோஷம் என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷம் சுக்ர வாரப் பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோஷம்தான். இந்த பிரதோஷத்தைத்தான் மகா பிரதோஷம் என்று அழைக்கின்றனர்.
சிவ தரிசனம் : பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகளும் நீங்கும்.
பசும்பால் அபிஷேகம்: பிரதோஷ நேரத்தில் நந்தி, சிவபெருமானுக்கு நடைபெறும் அர்ச்சனையின் போது நாம் அருகம்புல் நந்திக்கும் வில்வ இலை சிவனுக்கும் வாங்கிக் கொடுக்கலாம். பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும். நெய், சந்தனம், பன்னீர் என அவரவர்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொடுக்கலாம்.
சகல தோஷங்களும் நீங்கும்: தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்கிழமை பிரதோஷம்: செவ்வாய் திசை நடப்பவர்கள்,செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ,விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் ,சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவ ஆலயம் சென்று நந்தி, சிவன் தரிசனம் செய்யவேண்டும்.
சிவ தாண்டவ தரிசனம்: பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவரின் உடல் ஆனந்த மிகுதியால் பருத்தது இதனால் கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
நந்திக்கு காப்பரிசி: பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பாசிப் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.
சனி தோஷம் நீங்கும்: செவ்வாய்கிழமை பிரதோஷ தினமான நாளைய தினம் மாலை நேரத்தில் சிவன் கோவில் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் வைத்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications