ஆடி மாதம்.. அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல தயாரா? அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
சென்னை: ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை இந்து சமய அறநிலையத்துறை தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீகரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும்.
ஆடி மாதம் 17ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் தரிசன சுற்றுலா நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. காலையில் இருந்து இரவு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்வது, உணவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கட்டணத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் விவரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மன் கோவில்
தமிழ்நாட்டு பக்தர்கள் தெய்வ வழிபாட்டை தோன்றுதொட்ட போற்றி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு திருக்கோவிலுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரிதும் விரும்புபவர்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவிலுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து எதிர்வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலாவை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக அம்மன் கோவில்கள்
அதன்படி எதிர்வரும் ஆடி மாதம் சென்னை ,திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட ஒன்பது திருக்கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலை கற்பகாம்பாள்
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில் , மயிலாப்பூர் அருள்மிகு முண்டக கன்னியம்மன் திருக்கோயில், மாங்காடு மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட 10 கோவில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சை, மதுரை
அதேபோல திருச்சி, தஞ்சாவூர், மதுரை ,ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பயணத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீக சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.மேலும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோவில் பிரசாதம், திருக்கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

சுற்றுலா துறை இணையதளத்தில் பதிவு
பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா தொடர்பாக சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு https://www.ttdconline.com/login.jsp என்ற சுற்றுலாத் துறை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications