மணி பிளாண்ட் வைக்க உரிய திசை? வீட்டில் பணம், மகிழ்ச்சி பெருகணுமா?மணி பிளான்ட்டில் இதை போட்டு பாருங்க
சென்னை: மருத்துவ நன்மைகளை தரக்கூடிய மணி பிளாண்ட்டுகள், வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளன.. அந்தவகையில், மணி பிளான்ட்டுகளை எந்த திசையில் வைக்க வேண்டும்? பண வரவு வீட்டில் அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இதனை சுருக்கமாக பார்ப்போம்.
மணி பிளான்ட்கள், எப்போதுமே நம்மை எதிர்மறை ஆற்றல்களை இழுத்துகொண்டு, நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும் தன்மைகொண்டவையாகும்.. மணி பிளான்ட்கள் வீடுகளில் வளர்ப்பது, கடன் பிரச்சனைகளை தீர்ப்பதுடன், நிரந்தர செல்வம் குடும்பத்தில் வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்..

எந்த திசையில் வைக்கலாம்: இந்த மணி பிளாண்ட்களை வீட்டின் மேற்கு மற்றும் கிழக்கு திசையில் மணி பிளாண்ட் செடி நடுவதும் அசுபமாக கருதப்படுகிறது.. இதனால் குடும்பத்திலுள்ளவர் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடுமாம்..
எனவே, தென்கிழக்கு திசையில் மணி பிளாண்ட் வைத்தால் அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்... காரணம் இந்த தென்கிழக்கு திசையானது, விநாயகருக்கு உரிய திசை என்பதாலும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் இங்கு மணி பிளாண்ட்களை வைக்கலாம்..
உரிய திசை: ஆனால், எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்க கூடாது. வடகிழக்கு திசையில் வைத்து வளர்த்தால், பணச்செலவை வைப்பது குடும்ப உறுப்பினர்களிடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும். தவறான திசையில் மணி பிளாண்ட் வைப்பது வீட்டில் எதிர்மறையை அதிகரிக்க செய்யுமாம்.
அதுபோலவே, இந்த செடியை முறையாக பராமரிக்க வேண்டும். பராமரிக்காமல் விட்டுவிட்டால், துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படும். இந்த செடிகளிலுள்ள பழுத்த இலைகளை வளர விடவே கூடாது.. பழுத்த இலைகளே இல்லாமல் பராமரிக்க வேண்டும். அப்படி பழுத்த இலை காணப்பட்டால், அது வீட்டிலுள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிப்பதாகும். அதுமட்டுமல்ல, பிளாண்ட் இலைகள் காய ஆரம்பித்தாலும் உடனே வெட்டிவிட வேண்டும். வாட விடவும் கூடாது.
மண் தொட்டிகள்: இந்த செடிக்கு அதிக சூரிய ஒளியும் இதற்கு தேவையில்லை என்பதால், வீட்டிற்குள் வளர்க்கலாம். ஆனால், குடுவையில் வளர்க்காமல், தரையில் மண் தொட்டியில் வைத்து வளர்க்கலாம்.. இதனால், வேர்கள் நன்றாக பரவி படர்ந்து வளரும். செடி முழுவதுமாக தரையில் படரவிடாமல், ஒரு கயிற்றில் படர விடவேண்டும்.. எப்போதுமே மணி பிளாண்ட்டுகளின் அடர்த்தியை பொறுத்து, குடும்பத்தில் பணவரவு கணிக்கப்படுகிறது.
பணவரவு அதிகரிக்க வேண்டுமானால், மணி பிளாண்ட் வைத்திருக்கும் மண் தொட்டிக்குள், ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும். தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தபடியே ஊற்ற வேண்டும். அதேபோல, இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது, அதில் 2 கரண்டி காய்ச்சாத பாலையும் கலந்து, வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மணிபிளான்ட் செடியில் ஊற்றினால் பணக்கஷ்டம் நாளடைவில் தீரும்.
பால் அபிஷேகம்: அல்லது வெள்ளிக்கிழமைகளில் மணி பிளாண்ட் செடிக்கு பால் ஊற்றலாம். காரணம் லட்சுமி தேவிக்கு பால் மிகவும் பிடிக்கும் என்பதால், வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை செய்த பிறகு, மணி பிளாண்ட் செடிக்கு பால் கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications