நாக சதுர்த்தி.. பாம்பு கோவிலில் அபிஷேகம்.. குடும்பத்தோடு வழிபட்ட சின்னத்திரை நடிகை நட்சத்திரா நாகேஷ்
சென்னை: நாக தேவதைகளை வழிபடுவதற்கு உரிய மிகச் சிறந்த நாளான நாக சதுர்த்தி நாள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நாக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு டிவி சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ் பாம்பு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டார்.
ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் நம்முடைய வீட்டில் எந்த சுப காரியமும் நடைபெறாது. நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.

ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவராகவும் சித்தரிக்கிறார்கள். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்பதோஷமோ, நாக தோஷமோ இருந்தால் எந்த சுப காரியமும் ஏற்படுகிறது.
நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும், அப்படியோ பிறந்தாலும் அந்த குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும் சில குழந்தைகள் நோயால் அவதிப்படும். பிள்ளைகள் அவதிப்படுவதைப் பார்த்து பெற்றோர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவார்கள். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
நாக பஞ்சமி, கருட பஞ்சமிக்கு முதல் நாளில் வரும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும். ஆவணி ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் நாக சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்பட்டது.
நாக சதுர்த்தி தினம் நேற்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏராளமானோர் புற்றுள்ள கோவில்களுக்கு சென்றும் நாக ராஜா கோவில்களுக்கு சென்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். நாக தேவதைகளுக்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட்டார் டிவி நடிகை நட்சத்திரா நாகேஷ்.












Click it and Unblock the Notifications