பூசாரியே இருந்தாலும் தப்பித் தவறி கூட இந்த நேரத்தில் சிவன் கோயிலுக்குள் சென்றுவிடாதீர்கள்!
சென்னை: சிவன் கோயில்களில் மட்டும் தப்பித்தவறி கூட இந்த நேரத்தில் சென்றுவிடாதீர்கள். பின்னர் சில ஆச்சரியங்களை சந்திக்க நேரிடும். அவற்றால் ஆபத்தும் நேரிடலாம்.
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தெரியாமல் கூட இந்த நேரத்தில் மட்டும் சிவன் கோயிலுக்குள் சென்றுவிடாதீர்கள். ஒரு முறை சிவன் கோயிலின் பூசாரி இரவு கோயிலின் கதவை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அடுத்த நாள் விடியற்காலையில் சீக்கிரமாக வந்த அந்த பூசாரி எந்த சப்தமும் இல்லாமல் கோயிலை திறந்துள்ளார். அங்கு சிவலிங்கத்தின் அருகில் இருந்த பெரிய நாகம் பூசாரியின் கால்களை சுற்றிக் கொண்டது.
பூசாரி செய்வதறியாமல் பதற்றத்தில் சிவநாமத்தை கூறினார். பின்னர் அந்த நாகம் பூசாரியை விடுவித்தது. உடனே பூசாரி வேகமாக வெளியே போய் நின்ற நாகத்தை வணங்கினார். பின்னர் நாகம் சிவலிங்கத்தின் பின்னால் சென்றது.
மேலும் பூசாரி மனதை தைரியப்படுத்திக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். ஆனால் அந்த நாகம் அங்கில்லை. அப்போதுதான் அந்த பூசாரி உணர்ந்தார்- நாகத்தின் வடிவில் இருந்தது சிவபெருமான்!
அதனால்தான் சிவன் கோயில்களின் கதவுகளை திறக்கும் போது சங்குகளை ஊதி மத்தளங்கள் வாசித்து, மந்திரங்களை கூறி 3 முறை கதவை தட்டிய பிறகுதான் கதவை திறப்பார்கள். ஏனென்றால் உள்ளே சிவபெருமான் எந்த ரூபத்திலும் இருப்பார்.
இறை வழிபாட்டில் சங்கு என்பது மிகவும் முக்கியமானதொன்று. இந்த சங்கொலியால் தீய சக்திகள் ஒழிந்து நல்ல சக்திகளும், நல்ல எனர்ஜியும் உருவாகும் என்பது ஐதீகம். இந்த சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அர்த்தம்.
சுவாமிக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்வது நல்லது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்தின் போது சிவன் அக்னியாக காட்சி தருகிறார். அப்போது அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இது நடத்தினால் லட்சுமி கடாட்சம் என்கிறார்கள்.
கோயில்களில் மணி அடிப்பது போல் சங்கு ஊதுவதும் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். ஆனால் நாளடைவில் இறப்பிற்கு ஒப்பிட , "உனக்கு சங்கு ஊத போறேன், மாட்டுனே மவன சங்குதான்" போன்ற பேச்சு வழக்குகள் ஏற்படுகின்றன.
ஆனால் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் நல்ல சகுனம்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த சங்கு சிவன் கோயில்களில் மட்டுமல்ல, விஷ்ணுவுக்கு உகந்ததாகும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications