இலங்கை அதிபர் தேர்தல் 2024: ரணில் விக்கிரமசிங்க வெல்வாரா? சஜித்தின் எதிர்காலம் எப்படி? எண்கணித அலசல்
சென்னை: இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது யாருக்கு என்பது குறித்து எண் கணித நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். அதன்படி மூவரில் யார் அதிபராக போகிறார்கள் தெரியுமா?
இதுகுறித்து எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ். செல்வா என்பவர் கூறியிருப்பாவது: இலங்கை என்ற நாட்டின் விதி எண் 18. இதனால் வரும் 2025 ஆம் ஆண்டின் விதி எண் 9 ஆகவே இலங்கை அடுத்த ஆண்டு மிகப் பெரிய வளர்ச்சியை காணப் போகிறது என்பது நிச்சயம். குறிப்பாக விவசாயம், தொழில் அபிவிருத்தி, ஏற்றுமதி, இறக்குமதி டெக்ஸ்டைல்ஸ், உணவக தொழில்கள், இரும்பு சம்பந்தமானவை போன்றவைகளால் பணப்புழக்கம் அதிகமாகலாம்.

இருப்பினும் இலங்கை 18 என்ற எண்ணிலிருந்து மாற்றம் கண்டால் இந்த வளர்ச்சி தொடரலாம். வரும் ஆண்டுகளிலும் எப்படியோ இந்தியாவின் அருகில் இருக்கும் நாடு வளர்ச்சி பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி.
இன்னொரு மிக முக்கியமான செய்தி நிச்சயமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு ஆன தரைவழி பாலம் அமைந்தே தீரும். பாரதி கண்ட கனவு, உண்மையாக போகிறது. எனவே இலங்கை சிறப்பான நாடாவது உறுதி. வரும் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
சஜித் பிரேமதாஸா
பிறந்த நாள் 12.1.1967
கட்சியின் பெயர் - ஐக்கிய மக்கள் சக்தி என்பதாகும்.
சஜித் மிகவும் நேர்மையான, மிகவும் கோபக்கார அரசியல்வாதியாகவே இருப்பார். நேர்மைக்கு பங்கம் வந்தால் தொலைத்துவிடுவார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தாலும் அதையேதான் செய்வார்.
இவர் பிறப்பு எண்ணிற்கும் விதி எண்ணான 9-க்கும் சாதகமான எண்ணில் இவர் கட்சியின் பெயர் எண் 9 இல் அமைந்துள்ளது ஒரு சிறப்புத்தான். இருப்பினும் இவர் ஏன் அரசியலில் முன்னேற்றம் காண முடியவில்லை என்றால் இவரின் பிறந்த நாளிற்கு ஏற்ப பெயர் எண் அமையாததே காரணம் என்று சொல்லலாம்.
இவரின் விதி எண்ணான 9-க்கு சிறிதளவம் செயல்பட முடியாத பெயர் எண் 4 4 என்ற 8 ம் எண்ணில் அமைந்ததே காரணமாக தெரிகிறது. எப்படியோ ஒரு நேர்மையானவர் இலங்கையில் இருப்பது சிறப்பானதே.
அது போல் அனுர குமார திசாநாயக்க, இவர் பிறந்தது 24.11.1968 ஆகும். இவருடைய கட்சியின் பெயர் தேசிய மக்கள் ஆற்றல் என்பதாகும். அனுர குமார திசாநாயக்கயின் வருங்காலம் வெற்றியாகவே தெரிகிறது. ரணில் விக்ரமசிங்கே போன்று 24 ஆம் எண்ணில் பிறந்துள்ளார். இருவரும் 6 பிறப்பு எண்ணாகவும் 5 ஐ விதி எண்ணாகவும் கொண்டுள்ளது, ஆச்சரியமாக உள்ளது.
இதனால் காலப்போக்கில் இணைந்து பணியாற்ற அதிகமான வாய்ப்புள்ளது. இந்தத் தேர்தலில் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக நிச்சயம் திகழ்வார். வருங்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. மக்கள் மனதில் நீங்காத இடம்பெறும் அளவிற்கு இவரின் கட்சி உருவெடுக்கும். எனவே அடுத்து வரும் 5 ஆண்டுகள் கழித்து இவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாள் 24,3,1949 ஆகும். 75 வயதாகிறது. இவர் சுயேச்சையாக களம் காண்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட சின்னம் கேஸ் சிலிண்டர். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் யூஎன்பி மூலம் எம்பியாகி இலங்கையிலேயே இளமையான அமைச்சர் என்று பெயர் பெற்றார்.
1983 ஆம் ஆண்டு முதல் முதலாக பிரதமரானார். கடந்த காலக்கட்டத்தில் 6 முறை அவ்வப்போது பிரதமராக இருந்தாலும், முழுமையாக எந்த பதவி காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை. இதற்கு காரணம் இவர் பெயரில் வரும் NIL (RANIL) என்பதாகும்.
இப்போதும் டிப்ஸ் ஆக வழங்கப்பட்ட ஜனாதிபதிதான். தற்போது நடைபெறவுள்ள தேர்தல் நாள் 21.09.2024, இந்த தேதி ரணிலுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். சென்ற ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார சீர்கேடுகளை களைந்து மீண்டும் நிலைப்படுத்தியதில் பெரும் பங்கு ரணிலுக்கு உண்டு என்பதை மக்கள் மறக்கவில்லை.
தேர்தல் தேதி 21 என அமைந்துள்ளதால் ரணிலுக்கு எதிர்க்கட்சியினரால் கடும் நெருக்கடி ஏற்பட்டாலும் , இறுதி வெற்றி அவருக்கானதாகவே அரிய முடிகிறது. காலப்போக்கில் பல கட்சி எம்பிக்களின் ஆதரவும் இருக்கு கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகவ தெரிகிறது. மொத்தத்தில் ரணில் மீண்டும் ஜனாதிபதியாக இலங்கையை ரணிலே ரன் பண்ணுவார் என்பதே நியூமராலஜி கணக்கின்படி உறுதியாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications