திருவோணம் திருநாள் வந்தல்லோ.. சின்னத்திரை நட்சத்திரங்களின் வீடுகளை அலங்கரித்த அத்தப்பூ கோலங்கள்
சென்னை: கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அஸ்தம் தொடங்கி திருவோணம் வரைக்கும் 10 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை இன்றைய தினம் மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரை உலக பிரபலங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் இன்றைய தினம் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
கேரள மக்களின் அறுவடைத்திருநாளாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும் கோவை மாநகர், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டியது.

சென்னையில் வசிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, குத்து விளக்கேற்றி வைத்து புத்தாடைகள் உடுத்தி, சுவையான உணவுகளை சமைத்து விருந்தினர்களை அழைத்து ஓணம் சத்யா பரிமாறி மகிழ்ந்தனர். தங்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கேரளாவின் புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சின்னத்திரை பிரபலமும் பிரபல செய்தி வாசிப்பாளருமான ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் ஓணம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அத்தப்பூ கோலமிட்டு வீடுகளை அலங்கரித்து மகாபலி மன்னனை வரவேற்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications