Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனவில் அடிக்கடி வரும் ஆந்தை.. அலறல் சத்தம் கேட்கிறதா? துக்கமா? மகிழ்ச்சியா? ஆன்மீகம் செல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனவில் அடிக்கடி சிலருக்கு ஆந்தை வரும். சிலரோ ஆந்தையை அடிக்கடி நேரில் பார்ப்பார்கள். சிலருக்கு ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அச்சமாக இருக்கும். ஆந்தையால் என்ன பலன்கள் கிடைக்கும். ஆந்தையின் அலறல் கூறும் சகுனம் என்ன என்று பார்க்கலாம்.

முந்தைய காலங்களில் ஆந்தையை மரணத்தின் அறிகுறியாக பார்த்து வந்தனர். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அந்த ஊரில் யாருக்காவது மரணம் வரும் என்று மக்கள் அஞ்சினர். இதனால் சிலர் ஆந்தையை வெறுத்தனர். ஆந்தையை கண்டாலே கல்லை விட்டு வீசி விரட்டி அடித்தனர்.

Owl dreams and Meaning Tamil: Sagunam sastiram Owl sound good or bad

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லட்சுமி தேவியை வழிபடுகின்றனர் . மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இந்திய நாட்டு ஜோதிட கலைகளில் உள்ள பஞ்ச பட்சி சாஸ்திரம் எனப்படும் சாஸ்திர நூலில் கூறப்படும் ஐந்து வகையான பறவைகளில் ஆந்தையும் ஒரு பறவையாக இருக்கிறது.

வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர். சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர்.

வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி என்கின்றனர் வட இந்திய மக்கள். ஆந்தையை அடிக்கடி பார்ப்பதால் உங்கள் வாழ்வில் திடீர் மகிழ்ச்சி வந்துசேரும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும். மறுபுறம் நீங்கள் வேலைக்கு செல்லக்கூடிய இடங்களில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் சுபமானதாகவே கருதப்படுகிறது. நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றிகரமாக நிறைவேறும்.

நீங்கள் ஒரு சுப காரியமாக பயணம் மேற்கொள்ளும் போது, நீங்கள் போகும் வழியில் ஆந்தையைப் பார்த்தால், போகும் காரியம் வெற்றியடையும். வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. வெள்ளை ஆந்தைகள் அரிதாகவே காணப்பட்டாலும், அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதனால் உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும்.

உங்கள் வாழ்க்கை பிரச்னை நிறைந்ததாக இருந்தால், வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பதால் பிரச்சினைகள் நீங்கும். நேர்மறை ஆற்றலைப் பெறலாம். நீங்கள் பகலில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அது அதிர்ஷ்டம் தரும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கப் போகிறது மற்றும் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.

நீங்கள் எங்கேயாவது வெளியே செல்லும் போது அல்லது கடன் தொகையை வசூலிக்கச் செல்லும் போது ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால், அப்போது மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்கள் கடன் தொகையை வசூலிப்பீர்கள். பண வருமானம் அதிகரிக்கும் உங்கள் செயலில் வெற்றி ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய வழி கிடைக்கும். விரைவில் உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் பல வகையில் நன்மையைத் தரும் என கருதப்படுகிறது. அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இரவு நேரத்தில் ஆந்தையின் அலறல் குரல் கேட்டால் உங்கள் துறையில் நன்மையும், வெற்றியும் பெறுவீர்கள். பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வ வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இது போல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம்.

தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் என்பது வட மாநிலத்தவர்களின் நம்பிக்கை.

ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன. ஆந்தை ஒருமுறை அலறினால் துக்க செய்தி ஏதாவது வருவதை குறிக்கும். இதனையடுத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க வட இந்தியர்கள் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.

இரண்டு முறை ஆந்தை அலறினால் மகிழ்ச்சியான செய்தி மற்றும் ஈடுபடும் காரியங்களில் வெற்றி உண்டாகும். மூன்று முறை ஆந்தை அலறினால் இன்பங்களை அனுபவித்தல், உல்லாசம் தேடி வரும். வீட்டில் எவருக்காவது விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் ஒருவரின் வருகைக்கு வாய்ப்பு உண்டு.

ஆந்தையானது நான்கு முறை அலறினால் சண்டை, சச்சரவுகள் மற்றும் வழக்குகள் தேடி வரும். ஐந்து முறை ஆந்தை அலறினால் குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம். அது புனிதப் பயணமாகவும் அமையலாம். ஆறு முறை ஆந்தை அலறினால் தீர்த்த யாத்திரை, தொலைதூர பயணம் உண்டாகும். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஏழு முறை ஆந்தை அலறினால் பொருள் வரவு தேடி வரும் செல்வ சேர்க்கை ஏற்படும். எட்டு முறை ஆந்தை அலறினால் நோய், துன்பம் போன்றவை ஏற்படுவதை குறிக்கிறது. ஒன்பது முறை அலறினால் வாழ்க்கையில் சுபிட்சமும் முன்னேற்றமும் உண்டாகுமாம்.

ஆந்தையின் அலறல் கிழக்கு திசையிலிருந்து கேட்டால் அல்லது ஆந்தையை கிழக்கு திசையில் பார்த்தால் பொருளாதார ரீதியான நன்மைகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. தெற்கிலிருந்து ஆந்தையின் அலறல் கேட்க நேர்ந்தால் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள் என்று அர்த்தம். ஆந்தை தென்மேற்கு திசையிலிருந்து ஒலி எழுப்புவதைக் கேட்டால் அல்லது பார்த்தால் உங்களின் நிதி நெருக்கடி தீரும்.

ஆந்தை ஒரு நோயாளியின் மீது அமர்ந்தால் அல்லது அவரின் மேல் பறந்தால், மிகக் கடுமையான நோய்கள் கூட குணமாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், கனவுகளில் ஆந்தையைக் கண்டால் உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அர்த்தம். அதே சமயத்தில், உங்களில் அறிவு அதிகரிக்கும் உங்கள் சொந்த திறன் அதிகரிக்கும். ஆந்தையை கனவில் கண்டால் ஆற்றலும் தைரியமும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆந்தை அடிக்கடி கனவில் வந்தால் நீங்கள் எடுக்கப்போகும் முடிவைப்பற்றி 360 டிகிரி கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆந்தை பறப்பது போல காண நேர்ந்தால் சுதந்திரமான மனநிலையில் இருக்கிறீர்கள். ஆந்தைகள் பேசுவது போல கனவு கண்டால் செய்யப்போகும் செயல்களில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஆந்தையானது மரத்தில் அமர்ந்திருப்பது போல கனவு கண்டால் ஆன்மீக பயணம் செல்லப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர். ஆந்தை புத்திக் கூர்மையுள்ள பறவை என்றும் குறிப்பிடுகின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை வெறுக்க வேண்டாம். அடுத்து முறை நேரிலோ கனவிலோ காண நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். மகிழ்ச்சியோடு வணங்குங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+