பச்சை பயிறு பரிகாரம் பண்ணாலே பணம் வீட்டில் கொட்டுமே..தோஷம் தீர உடனே இந்த சிவன் கோயிலுக்கு கிளம்புங்க
சென்னை: கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள் அந்த அளவுக்கு கண் திருஷ்டி மோசமானது.. திருஷ்டி பட்டுவிட்டாலோ அல்லது தோஷத்தால் பாதிக்கப்பட்டு விட்டாலோ, வீட்டில் ஏதாவது தடங்கல்கள் வந்துகொண்டேயிருக்கும்.. உறவுகளுக்குள் சிக்கல், பிரிவுகள், நஷ்டம், பிரச்சனைகள் என ஒன்றுபோய் ஒன்று கிளம்பிவிடும்.. தோஷங்களிலிருந்து நிவர்த்தி அடைய, என்னென்ன கோயில்களுக்கு செல்லலாம்? சிக்கல்கள் நீங்கி அதிர்ஷ்டம் பெருக என்ன பரிகாரம் செய்யலாம்.. ஒருசிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
செவ்வாய் தோஷம், அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் என பல வகைகள் இருந்தாலும், அனைத்துக்குமே சிவன் கோயில்களுக்கு சென்று, இறைவனிடம் முறையிடுவதே தீர்வு..

நாகதோஷம் - திருமண தடை
நாகதோஷம் பாதிப்பு இருந்தால், தஞ்சை திருநாகேஸ்வரம் கோவிலுக்கும், நெல்லை மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கோவிலுக்கும் சென்று வழிபடலாம். சனி தோஷம் நீங்க வேண்டுமானால், காரைக்கால் திருநள்ளாறு மற்றும் தஞ்சாவூர் திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கலாம். ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருவாரூர் திருப்பாம்புரம் கோயிலுக்கு சென்று வணங்கலாம்.
மேலும், வீட்டிலும் மாலை நேரங்களில், வீட்டில் புள்ளிக்கோலம் போட்டு, அதன்மீது பசுநெய் அல்லது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றிவைத்து வருவதால் தோஷம் நீங்கும்.. ஏனென்றால், உறவுகளை இணைக்கும் ஆற்றல் இந்த புள்ளிக்கோலத்துக்கு இருக்கிறதாம்.
தோஷங்கள் நீங்க வழிபாடுகள்
அதேபோல, யாருக்காவது கல்யாண தடை இருந்தால், திருவாரூர் திருமணஞ்சேரி, திருவீழிமிழலையிலுளள 2 சிவன் கோயில்களுக்கும் சென்று வழிபடலாம்.. குழந்தைப்பேறு இல்லாதவர்கள், நாகப்பட்டினம் திருவெண்காடு சென்று வழிபடும்போது, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தீராத நோயும் தீர வேண்டுமானால், நாகை வைத்தீஸ்வரன் கோயில் அல்லது தஞ்சாவூர் சூரியனார் கோவிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி கோயிலுக்கு சென்று வழிபடலாம்.. மனநோய் தீர கோவையிலுள்ள திருமுருகன் பூண்டிக்கும், நிலுவையிலுள்ள வாக்கு வெற்றி பெற தஞ்சாவூர் அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கும், சென்று வணங்கினால் பலன் கிடைக்கும்.
ராமேஸ்வர நாதநாத சுவாமிகள்
பிறவியற்ற நிலையை அடைய வேண்டுமானால், திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவனையும், கடன் பிரச்சனை தீர வேண்டுமானால், தஞ்சாவூர் திருச்சேறை ரண ருண ஈஸ்வரரையும் வணங்கினால் பலன் உண்டு.. சுகப்பிரசவம் நடப்பதற்கு தஞ்சாவூர் திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை, திருச்சி குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை வணங்கி வர வேண்டும்.
முன்னோர்களை வழிபட தவறினால், ராமேஸ்வரம் ராமநாத சுவாமியையும், அனைத்து தீமைகளும் விலக, ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கும் சென்று வணங்கலாம்.
பூரண கும்பம்: கற்பக விநாயகர் படத்தை வடக்கு பார்த்தும், குரு பகவான் படத்தை நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாகும்.. பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தால், லட்சுமி கடாட்சம் உருவாகும். நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைத்தால், திருஷ்டி தோஷம் விலகும்.
திருஷ்டி நீங்க பரிகாரம்
அதேபோல, வீட்டில் திருஷ்டி, தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் பெருக, வெற்றிலையை கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்க விடலாம்.. வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்கிறார்கள்.. ஆனால், இந்த வெற்றிலையை காய விடக்கூடாது.. தினமும் புதிய வெற்றிலையை கட்டி தொங்கவிட வேண்டும்.
அதேபோல, ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலையும், அதன்மீது பச்சை கற்பூரத்தை வைட்டு, அதன்மீது ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்துவிட வேண்டும். பிறகு பச்சை கற்பூரத்தை மட்டும் தீபம் ஏற்றி, உங்களது வேண்டுதலை சொன்னால், விரைவில் தீர்வு கிடைக்கும்.
பண வரவு பெருக பரிகாரம்
அதேபோல, வெந்தயம், பச்சை பயிறு, பச்சை கற்பூரம் இவைகளை ஒன்றாக கலந்து பூஜையறையில் வைத்து பிரார்த்தி கொள்ள வேண்டும். பின்னர் நல்ல நேரம் பார்த்து, இவகைளை பீரோ அல்லது அல்லது பணப்பெட்டி, நகைப்பெட்டியில் தூவிவிட வேண்டும். 3 வாரம் கழித்து இந்த பொருட்களையும் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மறுபடியும் இதே 3 பொருளையும் பூஜித்து வைக்க வேண்டும்.. இதனால் கடன் தீர்ந்து பணவரவு அதிகமாக இருக்குமாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications