கனவில் பாம்பு வந்தால் நல்லதா கெட்டதா? என்னென்ன பலன்கள் பரிகாரங்கள் ?
கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.
சென்னை: நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். கனவுகள், கனவுகளுக்கும் காம உணர்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேராசிரியர் சிக்மண்ட் பிராய்டு எழுதியுள்ளார். கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம்.
நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.
ஒரு சிலரோ உயிரிழந்த முன்னோர்கள் நம்முடைய பெயர் சொல்லி அழைப்பது போன்ற கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று கேட்கின்றனர். அதே போல பறவைகள், விலங்குகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்றும் கேட்கின்றனர். பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும்.

தீராத கடன் தீரும்
நாகம் வழிபாட்டுக்கு உரியதாக நம் நாட்டில் உள்ளது. இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

ஆபத்துகள் விலகும்
ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

பதவி உயர்வு தரும் பாம்புகள்
பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால்
பாம்பு தவிர சில கனவுகளும் நல்ல செய்திகளை உணர்த்துகின்றன. கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்கள் தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறியாகும். நம் வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகள் கொண்டிருக்கும். தாத்தா, பாட்டி என இறந்தவர்கள் கனவில் வந்தால் நம்மீது அதிகம் பிரியமுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தம். நம்முடைய துன்பங்கள் தீரப்போகின்றன. நல்ல செய்தி ஒன்று வரப்போகிறதை சுட்டிக்காட்டுகிறார்கள். உங்களை நன்றாக சத்தம் போட்டு பெயர் சொல்லி கூப்பிட்டால் பழைய உறவுகள் புதுப்பிக்கப்பட உள்ளதைக் காட்டுகிறது.

துன்பங்கள் நீங்கும்
கனவில் வானத்தில் பறவைகள் கூட்டமாக பறந்து செல்வதைப்போல கண்டால் துன்பங்கள் நீங்கும். புதிய பதவி தேடி வரும். மயில் அகவல், தோகை விரித்து ஆடுவது போல கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரப்போகிறது. குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பறந்து செல்லும் கிளிகளைக் கனவில் கண்டால் மனது இலேசாகி புதிய உற்சாகம் பிறக்கும்.

யானை மீது சவாரி
குரங்குகளை கனவில் கண்டால் கடன் பிரச்சினை அதிகரிக்கும். யானை கனவில் வந்தால் பொக்கிஷம், புதையல் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம் யானை மீது சவாரி செய்வது போல கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். இறுதிச்சடங்கு செய்வது போல கனவில் வந்தால் ஏதோ அபாயம் நடைபெறுவதை உணர்த்துகிறது. வீடு இடிந்து விழுவது போலவோ, மரம் முறிந்து விழுவது போலவோ கனவு கண்டால் அந்த வீட்டில் ஏதோ துக்கச் செயல் நிகழ உள்ளதை உணர்த்துகிறது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications