பங்குனி உத்திரம்...ஐயப்பனுக்கு இன்று ஆராட்டு விழா..ஐயப்பனை தரிசிக்க குவியும் கூட்டம்
சபரிமலை: பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு பம்பையில் இன்று ஆராட்டு விழா நடைபெற்றது. ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் குவிந்துள்ளனர். இன்றைய தினம் ஐயப்பனை அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்யலாம் என்பதால் ஏராளமானோர் பம்பைக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீஐயப்ப சுவாமி, மணிகண்ட சுவாமியாக மண்ணில் அவதரித்த நன்னாளான பங்குனி உத்திர நாள் கொண்டாடப்படுகிறது. சாஸ்தா என்றும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி என்றும் போற்றப்படும் ஸ்ரீமணிகண்டனுக்கு பங்குனி உத்திரநாளில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி சுமந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப சுவாமியைத் தரிசிப்பது வழக்கம். மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பின் போது சபரிமலை நடை திறப்பு நிகழும்,. அதையொட்டி, சபரிமலைக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

பங்குனி உத்திர மகிமை
மாதந்தோறும் வருகிற உத்திரம் விசேஷம் என்றாலும் பங்குனி மாதத்தில் வருகிற உத்திரம் என்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திர நாளில்தான், ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக அவதரித்தார் என்கிறது ஐயப்ப சுவாமி புராணம். மேலும் சபரிமலை ஸ்தல புராணமும் பங்குனி உத்திரத்தையும் அதன் மகிமையையும் விவரித்துள்ளது.

சபரிமலையில் பங்குனி உத்திரம்
சபரிமலையில் பிரசித்தி பெற்ற பங்குனி ஆராட்டு விழா கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற்றது. பத்து நாள் நடைபெறும் ஆராட்டு விழாவில் ஏப்ரல் 4ஆம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது,

பம்பையில் ஆராட்டு விழா
திருவிழாவின் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. சபரிமலையில் இருந்து காலை 9 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, பம்பை ஆற்றில் ஆராட்டு நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள்.
பம்பையில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யலாம்.

பக்தர்கள் தரிசனம்
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு பம்பையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

விஷு பூஜை நடை திறப்பு
தொடர்ந்து இன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பூஜைக்காக ஏப்ரல் 11 முதல் 19 வரை நடை திறக்கப்படும். ஏப்ரல் 15 ல் சபரிமலையில் விஷுக்கணி தரிசனம் மற்றும் விஷு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனித்திருவிழாவின் ஆராட்டு விழா இன்று நடைபெறுகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று மாலையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் சிவன் கோவில் பகுதியில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளினர். தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மேள தாளம் முழங்க சிவன் கோவில், கருடாழ்வார் கோவில், பஜனை மடம், தளியல் முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு திரும்பி வந்தனர். வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளில் இருந்து பக்தர்கள் மலர்களால் சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் உள்ளே ஆதிகேசவ பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப்பட்ட பின்பு கிராதம் கதகளி நடந்தது.

ஆதிகேஷவ பெருமாளுக்கு ஆராட்டு
விழாவில் இன்று காலை கோவில் நடை தாமதமாகவே திறக்கப்பட்டது. நேற்று வேட்டை நிகழ்ச்சி நடந்ததால் கோவிலை புனிதப் படுத்தும் 'திருவிலக்கம்' நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆராட்டு விழாவுக்கு எழுந்தருளுகின்றனர். ஆராட்டு ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல ஆற்றூர், தோட்டவாரம் வழியாக மூவாற்று முகத்ததை சென்றடையும். அங்கு ஆராட்டு மற்றும் பூஜைகள் நடக்கிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications