அந்தமான், சிங்கப்பூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம்..பாலபிஷேகம் செய்த பக்தர்கள்..அரோகரா முழக்கம்
சென்னை: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் பெருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானை அபிஷேகம் செய்தனர். அந்தமானில் உள்ள வெற்றிமலை முருகன் ஆலயத்திலும் சிங்கப்பூரில் உள்ள பாலசுப்ரமணியர் ஆலயத்திலும் பங்குனி உத்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர்யில் உள்ள வெற்றிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இங்கு கணபதி, முருகன், சிவன், அம்பாள் என எல்லா சந்நிதிகளும் உள்ளன.

சென்னையில் இருக்கும் கந்தகோட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த வெற்றி மலை முருகன் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம் ,கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இன்றைய தினம் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வெற்றிமலை முருகன் கோவிலில் முருக பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடு செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்யவும் பால்குடம், காவடி ஏந்திவந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றவும், தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.

சிங்கப்பூரில் உள்ள யீஷுன் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில். இன்று பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்த வந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

வேலும் சூலாயுதம் குத்தி வந்தும் உடம்பெங்கும் அலகு குந்தியும் காவடிகள் சுமந்தும் ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாலசுப்ரமணியருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications