மயில் இறகை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகளா.. ட்ரை பண்ணி பாருங்க.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: குடும்ப ஒற்றுமைக்காகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் வருமானத்திற்காகவும் செல்வ வளத்திற்காகவும் சில வாஸ்து டிப்ஸ்களை நாம் பின்பற்ற வேண்டும். மயிலிறகு வாஸ்து தோஷத்தை போக்கக்கூடிய ஒரு பொருளாக உள்ளது. அதை நம்முடைய வீட்டில் எங்கே எப்படி வைத்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் வாகனம் மயில். அந்த மயிலை நாம் புகைப்படமாகவோ அல்லது சிலையாகவோ வீட்டில் வாங்கி வைத்திருப்போம். இது நமது வீட்டிற்கு அழகாக இருப்பதோடு ஆன்மீக ரீதியாக நேர்மறை சக்தியை அதிகரிக்கும். முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் பொழுது மயிலிறகு தான் பயன்படுத்துவார்கள். சிலர் மயிலிறகில் விசிறி வாங்கி பயன்படுத்துவார்கள். நம்முடைய வீட்டில் நாம் மயிலிறகை எங்கே எப்படி எந்த திசையில் வைத்தால் வாஸ்து சாஸ்திரப்படி என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நம்முடைய சிறு வயதில் புத்தகத்திற்குள் சின்னதாக ஒரு மயிலிறகை வைத்து அது குட்டிப்போடுமா என்று பார்த்துக்கொண்டிருப்போம். அப்படி அடிக்கடி பார்க்க பார்க்க நமக்கு நேர்மறை சக்தி அதிகரித்து படிப்பின் மீதான நாட்டம் கூடும். மயிலிறகை பார்க்கும் போதே புத்தகத்தினை புரட்டிப் பார்த்து படிப்போம். படிப்பிலும் கெட்டிக்காரத்தனம் அதிகரித்து இருக்கும். இப்போதும் அப்படித்தான் நாம் மயிலிறகை நம்முடைய வீட்டில் சில இடங்களில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை எண்ணங்களும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும்.
நம்முடைய வீடு நேர்மறை ஆற்றல்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும். எனவே நம் வீட்டிற்கு முன்பாக நிலை வாசலுக்கு எதிராக மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஒன்றை மட்டும் வைக்காமல் நான்கு அல்லது 5 மயிலிறகினை சேர்த்து வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றலை வீட்டிற்கு நுழைய விடாமல் தடுக்கும்.
அலுவலத்தில் ஏதாவது பிரச்சினை என்றாலோ, உங்களின் மதிப்புக்கு ஏதாவது பங்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைத்தாலோ உங்களுக்கு எளிமையான பரிகாரம் மயிலிறகுதான். வீட்டில் மயிலிறகை வைத்து அதை நீங்கள் பார்த்து விட்டு வெளியே சென்றால் போதும் உங்களின் மீதான மதிப்பு மரியாதை சமூகத்தில் கூடும். சின்னதாக மயிலிறகை நமது பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் அது நல்ல பலனை தரும். மயிலிறகு அழகானது மட்டுமல்ல நமது மதிப்பையே அழகாக்கும்.
நாம் சம்பாதிக்கும் பணம் வீண் விரைய செலவாகிறதா? நாம் அதற்கு பணம், நகை வைக்கும் அலமாரியில், பிரோவில் மயிலிறகை வைக்க வேண்டும்.
இதன் மூலம் வருமானம் கூடும் செல்வம் பெருகும். பணம், நகை அலமாரியில் ஒரு மயிலிறகை வையுங்கள். பணம் வீட்டில் நிலைக்கவும் செய்யும்.
படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் மயிலிறகுதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைக்கலாம். குழந்தைகள் படிக்கும் ஸ்டடி ரூமில் மயிலிறகை வைத்து தினமும் வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மயிலிறகை படுக்கை அறையில் நாம் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நெருக்கமும் கூடும். தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும்.
நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு அறையில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு மயிலிறகு பயன்படும். எட்டு மயிலிறகை எடுத்து ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். " ஓம் சோமாய நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வர வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும். மயிலிறகு வாஸ்து தோஷங்களை மட்டுமல்லாது கிரஹ தோஷங்களையும் நீக்கும்.. எல்லாமே நம்பிக்கைதான். நம்பிக்கையோடு நாம் செய்யும் எந்த பரிகாரமும் நமக்கு நன்மையை கொடுக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications