அசையும், அசையா சொத்துக்கள் விற்க, பூர்வீக வீடு, பாகப்பிரிவினை, நிலப்பத்திரம் கைக்கு வர செம பரிகாரம்
சென்னை: பாகப்பிரிவினையில் பிரச்சனை ஏற்படும்போது, அதை நிவர்த்தி செய்யக்கூடிய பரிகாரம் ஏதாவது உள்ளதா? சொந்தமாக வாங்கிய நிலங்களில் ஏதாவது சிக்கல் உள்ளதா? அதேபோல, விற்காத நிலம், வீடுகளை விற்க வேண்டுமானால், அதற்கும் எளிய பரிகாரம் உள்ளதா? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
சொத்து விவகாரங்களாக இருந்தாலும், நில விவகாரம் சம்பந்தப்பட்ட கோர்ட் வழக்குகளாக இருந்தாலும், தாய் வழி, தந்தை வழியில் வரவேண்டிய பூர்வீக சொத்து விவகாரங்களாக இருந்தாலும், அனைத்துக்குமே சட்டரீதியாக தீர்வு நிச்சயம் ஒருநாள் உண்டு..

தாந்திரீக சாஸ்திரம்: எனினும் சில சமயம் உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று சிலர் கருதக்கூடும்.. அல்லது வழக்கு விசாரணையின் தீர்ப்பு தாமதமாக கிடைக்கக்கூடும்.. அப்படி யாராவது கருதினால், இதற்கு சில பரிகாரங்கள் உதவுவதாக தாந்திரீக சாஸ்திரத்தில் விரிவாகவே கூறப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு பாகப்பிரிவினை பிரச்சனை உள்ளவர்கள், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று நல்லெண்ணெயும் பன்னீரும் அபிஷேகம் செய்துவரலாம். இதனால் பாகப்பிரிவினை பிரச்சனை விரைவில் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நிலம் விவகாரம்: நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால், மண் அகல் விளக்கில் பரிகாரம் செய்யலாம்.. மண் விளக்கு வாங்கி, அதை மஞ்சள் நீரில் சுத்தமாக கழுவி, மஞ்சள் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.
இந்த விளக்கில், காய்ச்சாத பசும்பால் 2 சொட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை காலையில் குளித்து முடித்து, குழைத்து வைத்துள்ள வசிய திலகத்தினை, நெற்றியில் வைத்துக்கொண்டு, உங்களது வேண்டுதலை சொல்லி பிரார்த்தி கொள்ள வேண்டும். இப்படி 11 திங்கட்கிழமைகளுக்கு செய்து வரும்போது, உங்களது பிரச்சனைகள் தீரும். மாதவிடாய் நாள் தவிர்த்துவிட்டு, பெண்களும் இதை செய்யலாம்.
அசையா சொத்துக்கள்: அதேபோல, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், உங்களிடம் விற்க முடியாமல் இருந்தால், அதற்கும் எளிய பரிகாரம் உள்ளது.. அதாவது, தொட்டா சிணுங்கி இலையை நீரில் கரைத்து கொண்டு, விற்க வேண்டிய அசையும் மற்றும் அசையா பொருட்களின் மீது தெளிக்கலாம்.
அதேபோல, சில வீட்டுக்கு, நீண்ட நாட்களுக்கு வாடகைக்கு வராமலேயே இருப்பார்கள். பூட்டியே வைக்கப்பட்டிருக்கும் அந்த வீட்டின் மீது இந்த நீரை தெளித்தால், விரைவில் குடிவருவார்கள். மொத்தத்தில் தடையுள்ள பொருள், பிரச்சனை தரக்கூடிய நிலங்களின்மீது இந்த இந்த நீரை தெளிப்பதால், பெரும் பலனை அடையலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.
சொத்துக்கள்: அதேபோல, ஒரு நபரின் பிறந்த தேதி, சொத்து வாங்குவதை நிச்சயமாக பாதிக்காது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள.. எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவரால் சொத்து வாங்க முடியும். ஒருவரின் ஜனன ஜாதக அமைப்புதான் இவைகளை தீர்மானிக்கும்.. குறிப்பாக, ஜாதகத்தில் லக்ன பாவம், 4ம்பாவம் மற்றும் 9ம்பாவம் போன்றவற்றின் பலம்தான் சொத்துக்களை வாங்கும் யோகத்தினை தரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வைகாசி 2026: சுப முகூர்த்தங்கள், வாஸ்து நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் முழு பட்டியல் -
குழந்தை வரம் வேண்டுவோர்.. வைகாசி விசாகம் நாளான்று இப்படி விரதம் இருந்தால் நல்லது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications