குபேர மூலையில் கற்பூரத் துண்டு.. பணம் ஈர்க்கும் பச்சை கற்பூரம்.. வீட்டில் இந்த இடத்தில் வைக்கலாமே
சென்னை: பல குடும்பங்களில், தெரிந்தோ, தெரியாமலோ சில செயல்களை செய்துவிடுகிறார்கள். இது சிலசமயம் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். இதுபோன்ற சிக்கல்களை, எளிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்கிறார்கள்.. அந்தவகையில், வறுமையை விரட்டி, பணவரவை உண்டுசெய்யும் பச்சைக்கற்பூரம் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம். இந்த பச்சை கற்பூரங்களின் குணங்கள் என்னவென்றும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த இந்த பச்சை கற்பூரம், ஆன்மீகத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

பச்சை கற்பூரம் பயன்கள்
பச்சை கற்பூரத்துக்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை நிறைய உண்டு. எனவே, ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சு போல கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் போட்டு வரலாம்..
ஒரு சிறிய கிண்ணத்தில், பச்சை கற்பூரம், 4 கிராம்பு, 2 ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கலக்க வேண்டும். இதனை பூஜை அறையின் தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இதனால் நிதி பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கையாகும். இதனால் துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய்விடும். கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் விலகிவிடும்.
பீரோ, பணப்பெட்டியில் பணம்
எனவே, இதே முடிச்சினை பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அல்லது 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து பர்ஸில் வைத்து கொள்ளலாம்.. தொழில் செய்யும் இடம், பணப்பெட்டியிலும் வைக்கலாம்.
அதேபோல, சனிக்கிழமை காலையில் குளித்து முடித்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு தட்டில் பச்சை கற்பூரத்தை பொடித்து போட்டு, ஏலக்காய் பொடி, கிராம்பு பொடியை கலக்க வேண்டும். இதனை உள்ளங்கைகளில் வைத்து சிறுசிறு உருண்டையாக உருட்டி கொள்ளலாம். இவை அனைத்தையும், பெருமாளின் பாதத்தில் வைத்துவிட்டு ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லி பஞ்சம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் போதும். பணக்கஷ்டம் மெல்ல குறையும்.
கண் திருஷ்டி வில
பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும்.. எனவே, 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவதால், வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.. அல்லது சாம்பிராணி தூபத்தில், இந்த பச்சை கற்பூரததையும் சிறிது சேர்தது காட்டினால் எதிர்மறை ஆற்றல் விலகும்.
அதேபோல முடக்கத்தான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, போன்றவற்றை சேர்த்து அரைத்து, அந்த பவுடரை பசு கோமியத்தில் கரைத்து வீட்டில் தெளித்தால் தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.. மேலும், சிறிது கல் உப்பு, பச்சைகற்பூரம் சேர்த்து மஞ்சள் துணியில் முடிந்து வாசலில் கட்டினால் திருஷ்டி விலகும்.. தீயசக்திகள் வீட்டிற்குள் நுழையாது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications