Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசியில் பிறந்தவர்கள் புரட்டிப்போடுவார்களா? புத்திசாலிகளா? கேரக்டரை செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசியில் பிறந்தால் புரட்டி எடுப்பார்கள் என்று வீட்டு பெரியவர்கள் பயப்படுவார்கள். இது தவறானது. புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் ஞான யோகியாக இருப்பார்கள். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.

புரட்டாசி மாதம் மழை மாதம்.. வெயிலும் கடுமையாக இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தாக்கும் என்பதால்தான் புரட்டாசி மாதம் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லை. ஆனால் வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எளிதில் நிறைய விசயங்களைக் கற்றுக்கொள்வார்களாம்.

Purattasi month born babies good or bad check the characters

தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி இந்த மாதத்தில் முக்கியமான விரதங்கள் உள்ளன. முன்னோர்களை வழிபடும் மகாளயபட்சம், மகாளய அமாவாசை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். புத ஆதிபத்யம் நிறைந்த இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். விரதங்கள், பண்டிகைகள் நிறைந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கற்பூர புத்திக்கொண்டவர்கள் இடம் பொருள் நேரம் பார்த்து பேசுவார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.

புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். 1823ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ஆம்தேதி மகனாகப் பிறந்தார்.
திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரத்தில் சமாதியடைந்தார். வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.

புரட்டாசியில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள். எதையும் தெளிவாக பேசி தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். இவர்களின் நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்து வராது. இவர்களின் குணத்தால் எளிதில் பகையை சம்பாதிப்பார்கள் மனக்கசப்பும் ஏற்படும். புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயகவுரவம் ரொம்ப பார்ப்பார்கள். ஒருதடவை வாக்கு கொடுத்து விட்டால் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். உற்றார் உறவினர்கள், சுற்றார்களுடன் அனுசரித்து அவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் சம்பாதிப்பார்கள்.

பூர்வீக சொத்துக்கள் எளிதில் கிடைக்கும். தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வழியில் சொத்துக்கள் சேரும். சூரியன் சாதகமாக இருந்தால் அப்பா வழியில் சொத்துக்கள் சேரும், சந்திரன் சாதகமாக இருந்தால் அம்மாவழி சொத்துக்கள் சேரும். புத்திசாலித்தனம் மிக்கவர்கள் என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவார்கள். அவ்வளவு சீக்கிரம் கடனாளியாக மாட்டார்கள். வேறு வழியின்றி கடன் வாங்க நேரிட்டாலும் அதை எப்பாடு பட்டாவது அடைத்துவிடுவீர்கள்.

இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சூரியன், சனி பலமாக இருந்தால் ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் இருப்பார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் கை கொடுக்கும். தலைமை பதவிகள் தேடிவரும். புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் நரம்பு பிரச்சினை தாக்கும். அதிகம் டென்சன் பேர்வலி இதனால் தலைவலி அதிகமாகும். சிலருக்கு பார்வை கோளாறுகளும் ஏற்படும். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் வயிறு கோளாறும் ஜீரண கோளாறும் ஏற்படும். நேர்முக எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

புத்திசாலித்தனம் கொண்ட இவர்கள் மூளையை உபயோகித்து ஜெயிப்பார்கள். கலைத்துறையில் சாதிப்பார்கள். கற்பனை சக்தி கொண்டவர்கள். சிறந்த எழுத்தாளர்கள், சினிமா துறையில் ஜெயிப்பார்கள். பத்திரிகைதுறையில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். நகை, ஜவுளித்துறையில் கொடிகட்டிப்பறப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். இவரால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். இயற்கை விரும்பிகள். இயற்கையான இடங்கள் நீர்வீழ்ச்சிகள், மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல விரும்புவார்கள். சுவையாக சமைத்து சாப்பிடுவார்கள்.

புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சிறந்த பேச்சாளர் கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடுவதிலும் தொடர் கதைகளையும், சிறுகதைகளையும் எழுதுவதிலும் நிகரற்று விளங்குவர். இவருக் கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வார்களாம். என்ன வாசகர்களே நீங்களும் புரட்டாசியில் பிறந்திருக்கீங்களா? உங்க கேரக்டர் எப்படி செக் பண்ணிப் பாருங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+