பீரோவில் ரோஜா.. செம்பருத்தி பூவில் இப்படி பரிகாரம் செய்து பாருங்க.. கடன் தீர்ந்து, பணம் பெருகுமாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குடும்பத்தை அலைக்கழித்து வரும் வறுமை நீங்கி, மகிழ்ச்சி பொங்க வேண்டுமானால், எளிய பரிகாரங்களை கடவுள்களுக்கு செய்து பலனை பெறலாம்.. அந்தவகையில், பரிகாரங்களுக்கு பூக்களும் உதவுகின்றன.. இதில் 2 வகையான பூக்களை பற்றி பார்ப்போம்.. இந்த பூக்களை வீட்டில் வைத்து வளர்ப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் வாஸ்து சாஸ்திரம் சொல்லி உள்ளது.. அதன் சுருக்கம்தான் இது.
சிவப்பு நிற மலர்கள் ரோஜா அல்லது செம்பருத்தி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டு வருவதால் அரசு வேலை கிடைக்கும் என்பார்கள்.இதில் செம்பருத்தி பூக்களை பொறுத்தவரை செல்வத்தை அதிகரிக்கவும், அதிர்ஷ்டத்தை தூண்டவும் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல செல்வத்துக்கு தெய்வமாகன லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமான பூக்களாக செம்பருத்தி கருதப்படுகிறது..

செம்பருத்தி மகிமை
எனவே குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டால், செம்பருத்தி பூக்களை பயன்படுத்தலாம்.. அதாவது செப்பு பாத்திரத்தில் நீரை தண்ணீரை நிரப்பி, செம்பருத்தியை போட்டு சூரிய பகவானை வணங்குவதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும். தம்பதிகள் பிரிந்திருந்தாலோ அல்லது குடும்பத்தில் இணக்கமான சூழல் இல்லையென்றாலோ, செம்பருத்தி பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம். இதனால் உறவுகள் வலுவடையும்.
லட்சுமி அருள் கிடைக்க செய்யும் செம்பருத்தி
வீட்டில் செம்பருத்தி செடிகளை நட்டு வைத்து வளர்ப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும்.. அதிலும் ஒற்றைச் செம்பருத்தி பூ சிவப்பு நிறங்களில் வீட்டில் வைத்து வளர்த்து வரும்போது பணம் தங்குதடையின்றி வீட்டிற்குள் வரும்.. இந்த ஒற்றை நிற செம்பருத்தி பூக்களை பூஜையறையில் வைத்து மனதார வேண்டி கொள்ளலாம்.. விநாயகருக்கு ஒற்றை நிற செம்பருத்தியை வைத்து வழிபட்டு வரும்போது, தடைகள், தடங்கல்கள் சிக்கல்கள் விலகும். சிகப்பு நிற ஒற்றை செம்பருத்தி செடியை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைப்பது சிறப்பு..
பீரோவில் ரோஜா பூ
அதேபோல ரோஜா பூக்களையும் சொல்லலாம்.. வீட்டிலுள்ள எதிர்மறை விரட்டி, குடும்பத்தில் செல்வமும், அமைதியும், ஆரோக்கியமும் தழைக்க இந்த ரோஜா பூக்கள் உதவுவதாக வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
அனுமானுக்கு 11 ரோஜா பூக்களை சமர்ப்பித்து, வேண்டி கொள்வதால், வாழ்க்கையில் அனைத்துமே வெற்றிகரமாக நடக்கும் என்பார்கள்..
அதேபோல, வெள்ளிக்கிழமை இரவு, லட்சுமி தேவிக்கு ஒரு ரோஜாவை வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும்.. இந்த ரோஜா பூவை பீரோவிலுள்ள வைத்துவிட்டால் போதும்.. இதனால் பொருளாதார சிக்கல் விலகி, நிதிப்புழக்கம் அதிகரிக்கும்.
5 ரோஜாப்பூக்கள்
கடன் தொல்லை அதிகமாக இருந்தால், 5 ரோஜாப்பூக்களை வைத்து எளிய பரிகாரம் ஒன்றை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம்.. பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு, ஒரு தாம்பூல தட்டில் வெள்ளை துணியை பரப்பி, 5 ரோஜாக்களை வைத்துவிட வேண்டும்.
இப்போது உங்களது பிரச்சனையை மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு ரோஜாவை வெள்ளை துணியிலேயே மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் புதன், அல்லது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என ஏதாவது ஒரு நாளில், இந்த முடிச்சை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். கடலிலும் போட்டுவிடலாம். இதனால் விரைவில் உங்களது வேண்டுதல் நிறைவேறும்.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications