சபரிமலை மகரஜோதி.. ஐயப்பன் திருவாபரணப்பெட்டி ஊர்வலம்.. கூடவே காவலுக்கு வரும் கருடன்
கேரளா: மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்னும் சில நாட்களில் பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்படுகிறது. திருவாபரணம் ஊர்வலமாக வரும் போது வானத்தில் கருடன் வட்டமிட்டுக்கொண்டு கூடவே காவலுக்கு வருவதை காண மெய் சிலிர்க்கும்.
மகர ஜோதி தரிசனம்: தமிழ்நாட்டில் தை மாதம் கேரளாவில் மகர மாதமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் தேதி, சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் மகர விளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறும். இது மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடுகளின் ஒன்றாகும்.

பந்தளம் அரண்மனை: மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளராஜா அரண்மனையில் இருந்து திரு ஆபரணம் கொண்டு வரப்படும். பந்தளராஜா அரண்மனையானது, பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், பந்தளத்திற்கு வந்து அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து விட்டு, பின்னர் அரண்மனையில் உள்ள திரு ஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துச் செல்வார்கள்.
ஐயப்ப பக்தர்கள் தரிசனம்: கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த திருஆபரணம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா ஆலயத்தில் இருந்து திரு ஆபரணத்தை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு சபரிமலையை நோக்கி புறப்படுவார்கள். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் அந்த ஆபரணங்களை, பந்தளராஜா வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலையில் சுமந்தபடி கொண்டு செல்வார்.
புனித தங்க நகைகள்: ஐயப்பனின் புனித தங்க நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது. திருவாபரணப் பெட்டி மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது. திருவாபரணப் பெட்டி,வெள்ளிப் பெட்டி,கொடிப் பெட்டி. திருவாபரணப்பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னிதியை அடைகிறது. மாளிகைப்புறத்தம்மன் சன்னிதிக்கு கொடிப்பெட்டி கொண்டு செல்லப்படும்.
மன்னர் கொடுத்த தங்க ஆபரணங்கள்: பந்தளம் அரண்மனையின் பொறுப்பில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்படுகிறது. சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது. பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோவில் கொண்ட தர்ம சாஸ்தா ஐயப்பனுக்கு பந்தள மன்னரால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.
திருவாபரண ஊர்வலம்: பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக பந்தளமன்னர் குடும்ப பிரதிநிதி உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்களே இந்த பெட்டிகளை சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.
வட்டமிடும் கருடன்: இன்றைய தினம் திருவாபரண ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இந்த திரு ஆபரணம் ஊர்வலமாக புறப்படும் நேரத்தில் இருந்து, சபரிமலை ஐயப்பன் ஆலயத்தைச் சென்றடையும் வரை மட்டும் வானத்தில் கருடன் தோன்றி, திருவாபரணம் செல்லும் பாதையில் கூடவே காவலுக்கு பறந்து வரும். இது இன்று வரை ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வாகும். இதனை காணும் பக்தர்கள் மெய் சிலிர்க்கும். அப்போது பக்தர்கள் எழுப்பும் சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.
மகரவிளக்கு பூஜை: மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த ஆபரண பெட்டிகளை காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். மகர விளக்கு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும் சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஒளிரும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க தங்க ஆபரணங்கள் அணிந்து காட்சி தரும் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும்.
அரசனாக காட்சி தரும் ஐயப்பன்: பொன்ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சி அளிக்கும் ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகர விளக்கு பூஜையைக்காண வருவார்கள். இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாளில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெய்சிலிர்க்கும் பக்தர்கள்: திருவாபரணம் சபரிமலை கோவிலுக்குள் செல்லும்போது, ஊர்வலத்தின் மூன்றாம் நாளாகிய மகர ஜோதி தரிசனம் நடைபெறும். பொன்ஆபரணங்களை அணிந்த ஐயப்பனை ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். தங்க ஆபரணங்களில் அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு பேரானந்தம் ஏற்படும். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.
மகர ஜோதி தரிசனம்: அந்தக் கணமே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் பார்ப்பது தனி பரவசம். மெய்சிலிக்கும் அந்த அனுபவத்தை வர்ணிக்க வார்தைகள் கிடையாது. மகர விளக்கு பூஜைக்காக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் தினசரியும் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 14,15ஆம் தேதிகளில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மன்னர் பரம்பரையினர் வழிபாடு: ஜனவரி 20ஆம் தேதி பந்தள அரண்மனை குடும்பத்தாரின் ஆச்சார வழிபாடுகள் மற்றும் சடங்குகளை தொடர்ந்து அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும். இத்துடன் இந்த ஆண்டுக்காக மண்டல மகரவிளக்கு பூஜை காலங்கள் நிறைவடைகிறது. அடுத்தது மாசி மாத பிறப்பு நாளில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications