சாமி விஷயத்துல வதந்தி கூடாது! நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சூரிய கிரகணத்தால் அடைக்கப்படாது
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூரிய கிரகணம் காரணமாக நாளை 3:30 மணி நேரம் நடை அடைக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் அது தவறான தகவல் எனவும், அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட தமிழகத்தின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருகின்றனர்.

கடந்த 16ஆம் தேதி மண்டல பூஜை காலம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் வருகை ஒரு நாளைக்கு 90 ஆயிரத்தை தாண்டி வருகிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மல்ய தரிசனமும், தொடர்ந்து நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
காலையில் 7 மணிக்கு உஷ பூஜையும், மதியம் 12 மணிக்கு களபாபிஷேகம். உச்ச பூஜை மேற்கொள்ளப்பட்டு ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:00 மணிக்கு தீபாராதனையும் 7:00 மணிக்கு புஷ்பா அபிஷேகமும் ஒன்பதரை மணிக்கு அத்தால பூஜையும் ஐயப்பனுக்கு செய்யப்படுகிறது. தொடர்ந்து 10:50 க்கு ஹரிவராசனம் பாடப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
தொடர்ந்து எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாகவும், பம்பையில் இருந்து சிறு வழிப் பாதையாகவும் பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசிக்கின்றனர். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டு இன்று மதியம் பம்பை வந்தடைந்தது. அங்கு கணபதி கோவிலில் தங்க அந்தி தரிசனத்துக்காக வைக்கப்பட்டு அங்கிருந்து தலைசுமையாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது.
இன்று மாலையே 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நாளை மண்டல பூஜை நடைபெறும். அன்று அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்கி 11 மணிக்கு நிறைவடைகிறது. மதியம் 12 மணிக்கு தங்க அங்கி அறிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு மீண்டும் 4 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 11 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பிறகு மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்
இந்த நிலையில் சூரிய கிரகணம் காரணமாக நாளை சபரிமலை மண்டல பூஜை நாளில் நடை மூன்றரை மணி நேரம் அடைக்கப்படும் என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. குறிப்பாக நாளை காலை 7.30 மணி முதல் 11 மணி வரை சூரிய கிரகணம் காரணமாக சபரிமலை நடை அடைக்கப்படும் என சமூக வலைதளங்களில் தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், இது சபரிமலை சீசனை சீர்குலைக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம். இது தொடர்பாக கேரளா சைபர் கிரைம் காவல்துறையில் திருவுதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் எச்சரித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications