வளசரவாக்கம் சாய்பாபா கோவிலில் விபூதியில் பாபாவின் கால் தடம்.. பக்தர்கள் பரவசம்
சென்னை: வளசரவாக்கத்தில் சாய் கூட்டு பிரார்த்தனை மையத்தில் விபூதியில் சாய்பாபாவின் கால் தடம் இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பெண் பக்தர்களும், பள்ளி மாணவர்களும் வணங்கி சென்றனர்.
சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. மனிதராக, மகானாக வாழ்ந்து கடவுள் அவதாரமாக உருவெடுத்த சீரடி சாய்பாபுவுக்கு சமீப காலமாக ஏராளமான ஆலயங்கள் தோன்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாபாவுக்கு அதிகளவில் கோவில் கட்டப்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சாய் பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது. அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத சக்தியாக விளங்குகிறார் என்பது சாய் பாபா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சாய்பாபா
சென்னையில் எத்தனையோ சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.
வளசரவாக்கம் அடுத்த கோத்தாரி நகர் பகுதியில் சீரடி சாய் கூட்டு பிரார்த்தனை மையம் செயல்பட்டு வருகிறது.

விபூதியில் கால் தடம்
வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கூட்டு பிரார்த்தனையில் கலந்து விட்டு செல்வது வழக்கம். நேற்றைய தினம் வழக்கம் போல் கூட்டு பிரார்த்தனைக்காக சாய்பாபா இருக்கும் அறையை திறந்தபோது தரையில் விபூதிகள் அதிக அளவில் இருந்ததும் அதில் சாய்பாபாவின் கால் தடம் அச்சு பதிந்து இருப்பது போன்றும் இருந்தது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பரவசமடைந்தனர்.

பக்தர்கள் பரவசம்
இது குறித்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனை அடுத்து ஏராளமான பெண் பக்தர்கள் அங்கு சென்று விபூதியில் சாய்பாபாவின் கால் தடம் இருப்பதை கண்டு பக்தி பரவசத்துடன் ஆச்சரியத்துடன் வணங்கி சென்றனர். பாபாவிற்கு மாலை அணிவித்தும் பாத தடத்தை தொட்டு வணங்கியும் சென்றனர்.
தகவல் அறிந்த உடன் பள்ளி மாணவ மாணவிகள் பலர் வந்து வேண்டிகொண்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாய்பாபா அற்புதம்
நாம் கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு அவரது தரிசனம் கிடைக்கும். அதேபோல் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் மகான்களின் கருணையும், மகான்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். சாய்பாபா எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அது போல அவரது பாதத்தை விபூதியில் பதித்து சென்றுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications