சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா.. சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் தேரோட்ட நிகழ்வுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குகிறது. இதனால் "எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி" என்ற சிறப்புப் பெயரும் இந்த கோயிலுக்கு உண்டு.இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறுது வழக்கம். இந்த விழா தான் இந்த கோயிலின் மிகப்பெரிய விழாவாகும்.

இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும். இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும். சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் பிறந்துவிட்ட நிலையில் விரைவில் நடைபெற போகிறது.
இந்நிலையில் சேலம் மேட்டூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஆ. ராதா கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார் . அந்த மனுவில் அவர் கூறுகையில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும். இதனை ஒட்டி திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த தேரோட்டத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இந்த ஆண்டு ஆடி மாதம் நடைபெற உள்ள தேரோட்ட திருவிழா சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற இதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரி கூட்டத்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரிக்க வந்தது
அப்போது இந்த வழக்கை விசாரித்து நீதிபதி மனுதாரர் ராதாகிருஷ்ணனின் மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications