குளிக்கும் போதும் இதை செய்யுங்கள்.. குளித்த பின்னர் இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!
மதுரை: குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டும். குளிக்கும் போதும் குளித்த பின்னரும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நாம் குளிக்கும் முறையில் சில ஆன்மீகம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னால் அறிவியலும் உள்ளது
இதில் குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

எப்படி குளிப்பது
நாம் குளிக்கும் போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ள வேண்டும். கடல் நீரில் வருடத்திற்கு ஒருமுறையாவது குளிப்பது நல்லது என்று சொல்வார்கள் எனவேதான் முன்னோர்கள் அமாவாசை காலங்களில் புனித நீராடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

கல் உப்பு குளியல்
கடலில் நீராட முடியாவிட்டால் நாம் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளிக்க வேண்டும். குளிக்கிற தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை சேர்த்து, நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்து விட வேண்டும். பெண்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று உப்பு தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை தலைக்கு குளிக்கும்போது உப்பு குளியல் செய்வது மிகவும் நல்லது.

கண் திருஷ்டி நீங்கும்
வாரம் ஒரு முறை இந்த உப்பு குளியல் செய்வது எந்த ஒரு தவறும் இல்லை. உப்பு குளியலை மேற்கொண்டு வருகின்றாரோ, அவருக்கு வாழ்க்கையில் தடைகளற்ற முன்னேற்றம் ஏற்படும். கண் திருஷ்டிகள் நீங்கும் காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உப்பின் பிசுபிசுப்பு தன்மை உங்கள் உடலில் ஒட்டி இருப்பது போல் தோன்றினால் சாதாரண தண்ணீரை ஊற்றி குளித்துக் கொள்வது எந்த ஒரு தவறும் இல்லை.

தயிர் தேய்த்துக் குளித்தால் பலன்
அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

குளித்த பின் துடைக்கும் முறை
குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும். ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம். நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்படுமாம்.

இந்த தவறை செய்து விடாதீர்கள்
நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள். அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நாம் முகம் தெளிவாகவும்,சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்துகொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாகி விடுவோமாம் எனவேதான் முதலில் முதுகை துடைக்க வேண்டும் என்று சொன்னார்கள் நம் வீட்டு பெரியவர்கள்.












Click it and Unblock the Notifications