சனி பிரதோஷத்துடன் வரும் சிவராத்திரி.. கடன் தீர செல்வம் செழிக்க இதை செய்ய மறக்காதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி மகா பிரதோஷம் சிவ ஆலயங்களில் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுவதைப்போல நரசிம்மர் ஆலயங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமையன்று மகாபிரதோசத்துடன் சிவ ராத்திரியும் இணைந்து வருவதால் இந்த நாளில் நாம் செய்யும் சில காரியங்கள் செல்வ வளத்தை அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும் காரிய வெற்றிகள் தேடி வரும்.

பிரதோஷ மகிமை: பிரதோஷங்கள் 5 வகைப்படும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், பிரளய பிரதோஷம், மகா பிரதோஷம் என்பதாகும். இதில் சனிக்கிழமைகளில் வந்தால், அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

Sani Pradosam and Sivarathiri Viratham and benefits remove debit issue

ஆரோக்கியம் தரும் பிரதோஷ வழிபாடு: திரயோதசி நாளில் விரதம் இருந்து சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சனி மகா பிரதோஷம்: சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்று சனிப்பிரதோசம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

கடன் நோய் தீரும் சனி பிரதோஷம்: நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும் இதன் மூலம் நோய்கள் நீங்கும். முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளில் சிவன், நந்திக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.

நரசிம்மர் வழிபாடு: பிரதோஷ நாளில் சிவபெருமானை வணங்குவது போல நரசிம்மரை வழிபடுவதும் நமக்கு பெரும் நன்மைகளை தரும். இந்த பிரதோஷ காலத்தில் நாம் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் தயிர் தேன் பன்னீர் வில்வம் சந்தனம் வாங்கிக்கொடுக்கலாம். அதே போல பிரதோஷ நேரத்தில் நரசிம்மருக்கு பானகத்தை வைத்து வழிபடுவது சிறப்பானது. கடன் பிரச்சினைகள் நீங்குவதற்கு நாம் நரசிம்மர் வழிபாடு செய்யலாம்.

எதிரி தொல்லை நீங்கும்: பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க வேண்டும். இதன்மூலம் மறுபிறவியில்லாத வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ருணம், ரோகம், சத்ரு பயமின்றி வாழ நமக்கு சிவபெருமானின் அருளாசி கிடைப்பது போல நரசிம்மர் வழிபாடும் நமக்கும் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடித்தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+