சாய்பாபா விரதம்.. நல்லதை தரும் சீரடி சாயி பாபா வியாழக்கிழமை பிரார்த்தனை.. ஷீர்டி சாய் பாபா மகிமைகள்
சென்னை: சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை விரதம் இருப்பதன் பலன்கள் என்னென்ன? என்னென்ன பிரசாதங்கள் படைக்கலாம்? வியாழக்கிழமைகளில் சாய்பாவுக்கு சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஷீர்டி சாயிபாபாவை, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்... யாருடைய வீட்டில் சாயிபாபாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ. அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சாய்பாபா: சாய் என்ற சொல்லுக்கு, சாட்சாத் கடவுள் என்று அர்த்தம்.. அதனால்தான், இந்துக்கள் சாய்பாபாவை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக கருதுகின்றனர்.. அந்தவகையில், வியாழக்கிழமைகளில் சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சாய் பூஜையுடன் வியாழக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் என்ற விதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற வேண்டுமானால், வாழ்க்கையிலுள்ள இன்னல்கள் மறைய வேண்டுமானால், வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். எப்போதுமே வியாழக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு சாய்பாபா, தன்னுடைய ஆசீர்வாதத்தை வழங்குகிறார்..
வியாழக்கிழமை விரதம்: எனவே, வியாழக்கிழமை, உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சாய் பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்ற வேண்டும். மனதார வணங்கும்போது, சாய் கதாவை மனதிலிருந்து கூற வேண்டும். அதேபோல, சாய் பூஜையின்போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அப்போது பிரசாதம் வழங்கலாம்.. சாய்பாபாவுக்கு கிச்சடி என்றால் மிகவும் பிடிக்கும் என்பார்கள்.. எனவே, வியாழக்கிழமைகளில இதை பிரசாதமாக வழங்கினால், சாய்பாபா மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்.,.
அதேபோல, சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது, அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறம் அணிந்து செல்லலாம். மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை மாலையாக அணிவிக்கலாம்.
பிரசாதம்: சாயி பாபாவின் படத்துக்கு தினமும் மாலை அணிவித்து பூஜை செய்ய வேண்டும்.. பொட்டு வைத்து தீபம், ஊதுபத்தி ஏற்றி பிரசாதமான பழங்கள் இனிப்புகள் கற்கண்டு எதுவானாலும், அதில் நைவேத்தியம் செய்து படைத்து தீபாராதனை காட்டலாம். "ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி" என்ற இந்த ஒற்றை வரி மூல மந்திரத்தை, கண்கள் மூடி தினமும் 108 முறை சொல்லிவிட்டு, தீபாராதனை காட்டினாலே உங்களது அத்தனை காரியமும் வெற்றியாகும்
ஷீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபாவை தரிசனம் செய்து வந்தால், தீராத துயரங்களும், தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நம்பிக்கை: ஒரு முறை பாபாவை நினைத்தாலே போதும், 9 தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும் என்பார்கள்.. எந்த அளவுக்கு விரதம் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பாபாவை நெருங்கலாம். எனினும் விரதம் இருங்கள் என்று பாபா ஒருபோதும் சொன்னதே இல்லை. அதனால், பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது.
வியாழக்கிழமையில் சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் கிரியா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் இமையவனே போற்றி
ஓம் இங்கித குணத்தினனே போற்றி
ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
ஓம் இருள் நீக்குவோனே போற்றி
ஓம் ஈகை கொண்டவனே போற்றி
ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உமாமகேசுவரனே போற்றி
ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications