மகா சிவராத்திரி விழா! நாளை இரவு உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம் என்ன?
சென்னை: மகா சிவராத்திரி அன்று சிவனுடைய மந்திரங்களை நாம் உச்சரித்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த அளவுக்கு சிவனின் மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி என்பது மிகவும் விசேஷமானது.

இந்த சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது. நாளை காலை முதல் விரதம் இருப்பவர்கள், நாளை இரவு கண் விழிப்பார்கள், இதையடுத்து நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு 4-ஆம் கால பூஜை முடிந்ததும் சிவனை தரிசித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இந்த சிவராத்திரியின் போது சொல்ல வேண்டிய சிவமந்திரம் என்ன என்பதை பார்க்கலாம்.
சிவ மந்திரம்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய
7 தலைமுறை பாவம் நீங்க
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நம:
சிவனருள் தரும் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
மரண பயம் போக்கும் மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
பாவம் நீக்கும் தியான மந்திரம்
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம் விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ












Click it and Unblock the Notifications