சிவன் கோவிலுக்கு விசிட்.. நந்தி மீது படம் எடுத்த நாகப்பாம்பு.. தீபாராதனை காட்டிய பூசாரி
திருப்பத்தூர்: பரமசிவன் கழுத்தில் நாகப்பாம்பு எப்போதுமே படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்கும். ஆடி மாதத்தில் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டியுள்ள நிலையில் நாகப்பாம்பு ஒன்று ஆம்பூர் அருகே உள்ள சிவ ஆலயத்திற்கு வந்துள்ளது. நந்தி மீது படம் எடுத்து ஆடிய பாம்புக்கு கோவில் பூசாரி தீபாராதனை காட்டினார்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு மீது மக்களுக்கு அத்தனை பயம். அதே நேரத்தில் புற்றுள்ள கோவில்களில் பாம்புக்கு முட்டையும் பாலும் வைத்து வழிபடுவார்கள். நாகங்களை வழிபடும் வழக்கம் பல ஆண்டுகாலமாகவே இருந்து வந்துள்ளது. பல கோவில்களில் நாகங்கள் வழிபட வந்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் ராகு கேது தோஷப் பரிகார ஸ்தலங்களில் முதன்மையானது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோயில். ராகு கேது பரிகார தலமான இந்த ஆலயம் ஆதி ஷேசன், ராகு கேது சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற இடம். ஆதி ஷேசனுடைய மூல விக்ரகமும் உற்சவர் விக்ரகமும் இங்கு உள்ளது. இங்கு இறைவன் ஷேச புரிஸ்வரர் என்றும் இறைவி வண்டார குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.
இது ஆதி ஷேசன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கோவிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள். பாம்புகள் இங்கு உலவுவதாகவும் ஆனாலும் பாம்புகள் யாரையும் இங்கு தீண்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். விஷம் தீண்டா பதி என்ற சிறப்பு பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
கடந்த 2002 மார்ச் 21 நாளில் காலையில் முதல் பூஜைக்காக நடை திறந்த போது விக்ரகத்தின் மேல் 7 அடி பாம்பு சட்டை இருந்திருக்கிறது. இன்றும் கோவிலில் அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஞாயிரு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கர்ப கிரகத்தில் பாம்புகள் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது .

இதே போல ஆம்பூர் அருகே சிவ ஆலயம் ஒன்றுக்கு வந்த பாம்பு நந்தி மீது ஏறி நின்று பாம்பு படம் எடுத்து ஆடியது. திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை பகுதியில் சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்குள்ள சிவபெருமான் வாகனமான நந்தி மீது நாகப்பாம்பு திடீரென படம் எடுத்தது. இதனைக் கண்ட பக்தர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்து நாகப்பாம்பை வழிபட்டனர்.
மேளச்சத்தம் கேட்ட போது கூட பாம்பானது நகராமல் நந்தியின் கொம்புகளுக்கு மேல் படம் எடுத்து நின்றது. இதனையடுத்து கோவில் பூசாரி நாகப்பாம்பிற்கு தீபாராதனை காட்டினார். இது குறித்து தகவலறிந்து வந்த ஊர் மக்கள் நாகப்பாம்பை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். நாகப்பாம்பானது நீண்ட நேரம் நந்தி மீது நின்று சிவனை வழிபட்டுக்கொண்டிருந்ததை ஏராளமான பக்தர்கள் வீடியோ எடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications