Solar Eclipse: 2025 இல் அமாவாசையன்று இரு சூரிய கிரகணங்கள்! எந்தெந்த ராசிகளுக்கு நன்மை தெரியுமா?
சென்னை: 2025 ஆம் ஆண்டு அமாவாசை நாளில் இரு சூரிய கிரகணங்கள் வருகின்றன. அதற்கான பலன்கள் என்ன தெரியுமா? இவை இரண்டுமே சிறப்பு வாய்ந்தவையாகும் என சொல்லப்படுகிறது. அந்த நாளில் நாம் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்.
சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் அறிவியல் நிகழ்வுகளாக கருதப்பட்டாலும் இவை சாஸ்திரம், ஜோதிட ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் நிகழ்வு ஆகும்.

அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஒரே நாளில் வரும் சூரிய கிரகணம் பகுதி கிரகணங்களாக இருக்கும். 2025 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 ஆம் தேதி நிகழ்கிறது. இது பகுதி சூரிய கிரகணம்தான், முழு கிரகணம் கிடையாது. இந்திய நேரப்படி மார்ச் 29ஆம் தேதி 2.20 மணிக்கு தொடங்கி மாலை 6.11 மணிக்கு முடிவடையும்.
இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா , வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.
அது போல் இரண்டாவது சூரிய கிரகணமானது செப்டம்பர் 21 ஆம் தேதி வரும். அதுவும் பகுதி கிரகணமாகவே தெரியும். இரவு 11மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணமும் இந்தியாவில் தெரியாது. இது ஆஸ்திரேலியா, அன்டார்டிா, பசிபிக் பெருங்கடல் அட்லாண்டிக் பகுதிகளில் நன்கு தெரியும்.
இரு கிரகணங்களுமே அமாவாசை நாளில் நடைபெறுகிறது. இரண்டு தேதிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்கிறார்கள். முதல் நாள் சூரிய கிரகணம் சனி அமாவாசையில் வருகிறது. அந்தநாளில் சனி , கும்ப ராசியிலிருந்து மீனத்திற்கு இடம்பெயர்கிறார். இதனால் இந்த அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
இந்த நாளில் அளிக்கப்படும் தானத்தின் பலன் அதிகரிக்கும். ஏழைகளுக்கு நன்கொடையை வழங்கலாம்.

இந்த சூரிய கிரகணத்தால் மிதுனம், துலாம், தனுசு, மீனம் உள்ளிட்ட ராசிகள் பலனடைய போகிறது. அதாவது மிதுனம் ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ள வேலைகள் எல்லாம் முடியும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் நலனிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னேற்றம் தெரியும். இந்த கிரகணத்தின் போது உணவு சமைப்பதையோ உணவு உண்பதையோ செய்யவே கூடாது. புதிய வேலைகளை செய்வதிலிருந்து விலகியே இருங்கள், வேத மந்திரங்களை சொல்லுங்கள். நெகட்டிவ் எனர்ஜி ஓடிவிடும்.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications