Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ருத்ராட்சம் அணிந்திருந்தால் அசைவம் சாப்பிடலாமா? ருத்ராட்சைகளை இப்படி கிளீன் பண்ணுங்க: மகத்துவம் மாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் ருத்ராட்சம் அணிய வேண்டும்? ருத்ராட்சை அணியும் முறை எப்படி? ருத்ராட்சை மாலையை அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா? ருத்ராட்சையை சுத்தம் செய்யும் முறை என்ன? இவைகளை பற்றி எளிமையாக இங்கே பார்ப்போம்.

ருத்ராட்சைகள் மருத்துவ குணம் வாய்ந்தவை.,. மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் என்பதால் நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.. நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தி கொண்டது.

spirituality ruthraksha

பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற அபாய நோய்களின் வீர்யத்தை ருத்ராட்சைகள் குறைக்கின்றன. நச்சுத்தன்மை வாய்ந்த புண்கள் ஆறிவிடும். இதற்கு காரணம், சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக்கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை ருத்ராசைகளுக்கு உண்டு. எனவே, உடல் குளிர்ச்சி பெறவும் இந்த ருத்ராட்சையை பலர் அணிவார்கள்.

ஆன்மீகத்தில் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த மங்களகரமான பொருளாக ருத்ராட்சைகள் பார்க்கப்படுகின்றன.. சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக புராணங்கள் உண்டு. அதனால்தான், சிவபக்தர்கள் கட்டாயம் இந்த ருத்ராட்சையை அணிவார்கள்,.

பலன்கள்: ருத்ராட்சையை அணியும்போது மனம் அமைதி பெறுவதுடன், முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும்..
மனதை அடக்கி, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் ஆற்றல் இந்த ருத்ராட்சைகளுக்கு உண்டு.. ருத்ராட்சை அணியும் மனதில் ஒருவித தெளிவும், நிம்மதி உணர்வும், ஆத்ம திருப்தியும் கிடைக்கின்றது...

ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஞாபகசக்தியும் அதிகமாகவே இருக்குமாம். 21 வகைகள் ருத்ராட்சங்கள் உள்ளதாக சொல்வார்கள்.. எனினும் ருத்ராட்சை மாலையை அணிவதற்கு சில விதிமுறைகள் உள்ளன.. சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

ருத்ராட்சை அணிய வேண்டுமானால், அசைவத்தை கைவிட வேண்டும். ஒருவேளை அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் பூஜை நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். அசைவம் சமைத்து கொடுப்பவராக இருந்தாலும்கூட, ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். ருத்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது..

எப்போது அணியலாம்: மாதவிடாய், திதி, தாம்பத்யம் போன்ற விஷயங்கள் இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால், இதுபோன்ற நேரங்களில் ருத்ராட்சை அணியலாம்.. ஆனால், ஒருவர் இறந்த இடத்திற்கு செல்லும்போதே, அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு செல்லும்போதோ ருத்ராட்சத்தைஅணியக்கூடாது..

அதேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்பார்கள்.. ஏனெனில் தூங்கும்போது நம்முடைய உடல் தூய்மையற்றதாகவும், செயலற்றதாகவும் இருக்கிறது.. அத்துடன், தூங்கும்போது ருத்ராட்சைகள் உடைந்துவிடக்கூடும். அதனால்தான் படுக்கையறையில் ருத்ராட்சத்தை கழட்டி கொள்ள வேண்டும் என்றும், காலையில் எழுந்து குளித்தபிறகு "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தவிர்க்கலாம்: பிறந்த குழந்தையை பார்க்க செல்லும்போது ருத்ராட்சை அணியக்கூடாது. அப்படி அணிந்தால், இன்னல்கள் பல வந்துசேரலாம். தூங்கும்போது, ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், மனம் அமைதி பெறுவதுடன், நல்ல தூக்கம் வரும். கருப்பு நூலில் மட்டும் ருத்ராட்சத்தை கோர்த்து அணியக்கூடாது.

திருமணமானவர்கள் ருத்ராட்சை அணியலாமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு.. இல்வாழ்க்கைக்கும், ருத்ராட்சம் அணிவதற்கும் தொடர்பு இல்லை.. எனவே, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அணிவது தவறில்லை.

சுத்தம் செய்யலாம்: ருத்ராட்சத்தை அழுக்குடன் அணிய கூடாது.. அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் சோப்பு பயன்படுத்தாமல், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது பசும் பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து, புது பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். பிறகு ஒரு சுத்தமான துணியில் ஈரமின்றி துடைத்து, பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு சுத்தமான நீரில் கழுவி, ருத்ராட்சையை விபூதியில் போட்டு வைக்க வேண்டும். இறுதியாக பசும் பாலில் கழுவிவிட்டு, அதனை சுத்தமாக துடைத்து அணிந்து கொள்ளலாம்.

பஞ்சமுக ருத்ராட்சம் எப்படி அணிவது: பஞ்சமுக ருத்ராட்சத்தை திங்கட்கிழமைகளில் அணியலாம்.. காரணம், திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.. இந்த நாளில் சிவபெருமான் சிலைக்கு முன்பு, தீபம் ஏற்றி வில்வ இலைகளை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு 5 முக ருத்ராக்ஷத்தை அணியும் மந்திரமான "ஓம் ஹ்ரீ க்லீந் நமஹ்" என்று உச்சரித்துவிட்டு, பஞ்சமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

நம்முடைய கர்ம வினைகளை அறுத்தெறிய ருத்ராட்சைகள் உதவுகின்றன. இந்தியாவில் ருத்ராட்ச மரம் இமாலய மலை அடிவாரத்தில் வளர்கிறது.. ருத்ராட்சத்தில் பல மகங்கள் கொண்ட வகைகள் இருந்தாலும், 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சைகள் அதிகளவில் கிடைக்கின்றன... அவைகள் குறைவான விலையிலும் கிடைக்கனிற்ன.. 5 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணிந்து ஈசனின் அருள் பெறலாம் என்பதுடன், 5 அல்லது 6 முக ருத்ராட்சம் அணிய யாருக்கும் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது என்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+