Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் மொத்தமும் அடைய உதவும் பாசிப்பருப்பு.. பணப் பிரச்சனை தீர்க்க எளிய பாசிப்பருப்பு பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதில் பாசி பருப்பு முக்கியமானதாகும். அந்தவகையில் எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம்?

பாசி பருப்பு அதிக புரோட்டீன் உள்ள சத்தான பருப்பு வகையாகும்.. அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் உள்ளது.. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அதிகமாகவே அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

Spirituality green moong dal Paasi Payiru Parigaram

சத்தான பாசிப்பருப்பு

எனவேதான் கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த பாசிப்பருப்பை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பார்கள்.. காரணம், இந்த பருப்பு எளிதில் ஜீரணமாவதுடன் அதிலுள்ள சத்துக்கள் நேரடியாகவே கருவிலுள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்..

நார்ச்சத்து, புரோட்டீன்

உடலிலுள்ள பித்தமும், மலச்சிக்கலும் குணமாக வேண்டுமானால் பாசிப்பருப்பே மருந்தாகின்றன.. வளரும் பிள்ளைகளுக்கு பாசிப்பருப்புடன், வல்லாரை கீரையுடன் சமைத்து தரும்போது, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் பல நன்மைகளை தரக்கூடிய பாசிபருப்பு, ஆன்மீகத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.. பெரும்பாலும் பரிகாரங்களுக்கு இந்த பாசிபருப்புதான் உதவுகிறது.. அதிலும் கடன் தீர செய்யும் பரிகாரங்களில் பாசிபருப்பு கட்டாயமாகும். அவைகளை எப்படி செய்வது தெரியுமா?

ஆன்மீகத்தில் பலன்

கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும்.

இதுபோன்றவர்களுக்கு ஒரு கைப்பிடி பாசிபருப்பு உதவும்.. அதாவது, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி, வெல்லம் ஒரு கைப்பிடி எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், ஊறியிருக்கும் பாசி பருப்பை பசு மாட்டிற்கு, கடன் பாதிப்பு உள்ளவர்கள், தங்கள் கையாலேயே தந்து வரவேண்டும்..

இப்படி பாசி பருப்பு தந்து, கடனிலிருந்து விடுபட வேண்டும் என்று கோமாதாவிடம் மனதார வேண்டிக் கொள்ளும்போது, மெல்ல பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

வெள்ளிக்கிழமை பாயாசம்

அதேபோல, ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவில் ஊறவைத்துவிட்டு , விடிந்ததும் சர்க்கரையும், வாழைப்பழமும் கலந்து பசுமாட்டிற்கு தந்து வருவதாலும் பலன் கிடைக்கும். அல்லது, ஆசிரமம், காப்பகம் போன்றவற்றிற்கு பாசிப்பருப்பை தானம் செய்யலாம்..

பாசி பருப்புடன் வெல்லம் சேர்த்து பாயாசம் செய்து, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று நைவேத்திய பிரசாதமாக வைத்துவிட்டு, வேண்டிக் கொண்டு, அந்த பாயாசத்தை அங்குள்ள பக்தர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் தானம் செய்யலாம். அத்துடன் வீட்டிலும் சமையலில் பாசிப்பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைக்கும்போது, இந்த பாசிப்பருப்பு பாயாசத்தை வைக்கலாம்.. கோவிலுக்கு தானமாக தருவதானால், புதன்கிழமைகளில் நல்ல நேரம் பார்த்து தலாம்.. எந்த கடன் இருந்தாலும் தங்களது குல தெய்வத்தை பிரார்த்திக் கொள்ள வேண்டும்..

குலதெய்வம் வழிபாடு

அந்தவகையில், கடன் தொல்லை நீங்க வேண்டுமானால், பௌர்ணமி தினத்தன்று, குலதெய்வத்துக்கு நெய்வேத்தியமாக பாசிப்பருப்பிலான உணவை பிரசாதமாக வைத்து வேண்டிக் கொள்ளலாம்.

12 பௌர்ணமிகளுக்கு இப்படி செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீரும் என்பார்கள்.. இப்படி பிரசாதமாக வைக்கப்பட்ட பாசிப்பருப்பை அனைவருக்கும் தருவதற்கு முன்பு காகத்துக்கும் வைத்துவிட்டுபகிர்ந்தளிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+