பர்ஸ்ஸில் பணம் தங்கணுமா? பண மரம் போதுமே.. வறுமையை விரட்டும் லக்கி செடி.. வாஸ்துபடி வைங்க ஜேட் செடி
சென்னை: எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்கவில்லையா? சின்ன சின்ன தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டேயிருக்கிறதா? வீட்டிற்குள் உள்ள துர்சக்தியை விரட்டி, பாசிட்டிவ் எனர்ஜியை பரப்புவதால், அனைத்து சிக்கல்களுமே ஓரளவு தீரும். அந்தவகையில், நமக்கு கைகொடுத்து உதவுவதுதான் ஜேட் செடி.
பொதுவாக, வீடுகளில், மணி பிளான்ட், துளசி, கற்றாழை போன்ற செடிகளை வாஸ்துப்படி வளர்ப்போம். ஆனால், பலரும் அதிகமாக அறியப்படாத செடிதான் இந்த ஜேட் செடி.

பண மரம்: இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு வட்டமாக பளபளப்பாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக காணப்படும். செல்வத்தைப் பெருக்கும் செடி என்பதால் பண மரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதேபோல கிராசுலா என்பார்கள்.. அல்லது குபேர செடி என்பார்கள்.. லக்கி செடி என்றும் சொல்வார்கள்.. இந்த ஜேட் செடியை வீட்டில் வைத்தால் செல்வம் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ஜேட் செடிகளுக்குள் உள்ள சிறிய துளைகள், இரவு நேரங்களில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது... இதனால், காற்றை சுத்தம் செய்யும் திறனை உள்ளடக்கி, காற்றின் தரத்தையும் மேம்படுத்துகிறது. அதனால்தான் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடிய இந்த செடியை படுக்கை அறையில் வைத்திருப்பார்கள்.
வகைகள்: இந்த ஜேட் செடியில் கிட்டத்தட்ட 40 வகைகள் இருக்கிறதாம்.. பொதுவான ஜேட், நீலப் பறவை ஜேட் எனப்படும் ப்ளூ பேர்ட், கோல்லம் ஜேட், வெள்ளி டாலர் ஜேட், துறைமுக விளக்குகள், லேடி ஃபிங்கர்ஸ் ஜேட், ஹாபிட், பிங்க் ஜேட் போன்ற 8 வகையான ஜேட் தாவரங்கள் உலகளவில் பிரபலமானவையாகும்.
இந்த செடியும் வாஸ்து செடி என்பதால், சரியான திசையில் மட்டுமே நடவேண்டும். அந்தவகையில், வீட்டின் வடக்கு திசையில் நட வேண்டுமாம்.. அல்லது தென்மேற்கு திசையில் நட வேண்டும். இதனால், உங்களது பலவீமான நிதிநிலைமை பலமாகும்.. அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். வீட்டில் ஜேட் செடி வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கிறது... அத்துடன் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். நீங்கள் பிசினஸ் செய்பவராக இருந்தால், இந்த செடியை தென்மேற்கு திசையில் நட்டு வைக்கலாம்..
தவிர்க்கலாம்: ஆனால், இந்த செடியை வைக்கும் திசையானது, இருட்டாக மட்டும் இருக்கக்கூடாது. செடியின் மீது சூரிய ஒளி விழுமாறு வைக்க வேண்டும். அதேபோல, வீட்டின் உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் இருக்கும்படி வைப்பது மிகவும் நல்லது என்பார்கள். எக்காரணம் கொண்டும் தெற்கில் வைப்பதை தவிர்த்து விட வேண்டும். இந்த செடியை வளர்ப்பதனால் பணப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்பதுடன், மனமும், குடும்பமும் மகிழ்ச்சி பெறும்.












Click it and Unblock the Notifications