தப்பித் தவறிகூட காலையில் இதை பார்த்துடாதீங்க.. தூங்கி எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்.. செமல்ல
சென்னை: தினமும் நாம் தூங்கி எழுந்ததும், அந்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாளில் செய்யும் காரியம் வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், சில பொருட்களை நாம் கண்ணால் பார்க்காமல் இருப்பது நல்லது என்பார்கள்.. அந்தவகையில், காலையில் தூங்கி எழுந்ததும் முதன் முதலாக நாம் செய்யும் காரியம், நாம் பார்க்கும் பொருள்கூட, அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. அவைகளை பற்றிதான் சுருக்கமாக இங்கே பார்க்க போகிறோம்.
வாஸ்து படி சில பொருட்களை காலை எழுந்தவுடன் பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.. அந்தவகையில் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கக்கூடாது என்பார்கள்.. அது அமங்கலமானதும்கூட.. காலையில் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், அன்றைய நாள் முழுவதுமே உங்களது செயலில் பாதிப்புகள் வரலாம்.

எதிர்மறை தாக்கங்கள்
அதேபோல, காலையில் எழுந்ததுமே, அழுக்கு பாத்திரங்களை பார்ப்பது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல, உங்களது நிழலை பார்ப்பதும் நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை... அழுக்கு, குப்பைகளை பார்ப்பதும் நேர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணிவிடும். காலியான பாத்திரங்கள், உதிர்ந்த தலை முடி, சிதறிக் கிடக்கும் பொருட்களை பார்க்கக்கூடாது.
துடைப்பத்தையும் பார்க்கக்கூடாது.. இது பண சிக்கலை உண்டுபண்ணிவிடும்.. அதேபோல தூங்கி எழுந்ததுமே செல்போனை பார்க்கக்கூடாது. காரணம், நாம் பார்க்கும் முதல் காட்சியே ஏதாவது துக்கம் தரக்கூடிய செய்தியாக அல்லது நெகட்டிவ் செய்தியாக இருக்கலாம். உணர்ச்சிகளை பாதிக்கக்கூடிய சண்டை சச்சரவுகளையும் பார்க்கக்கூடாது..
என்ன பார்க்கலாம்
அப்படியானால், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததுமே என்ன பார்க்கலாம்? வலது உள்ளங்கையை கண்விழித்து பார்ப்பது சிறப்பு.. இதனால் நாள் முழுவதும் மங்களகரமான காரியங்கள் சுமூகமாக நடக்கும்.. அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிக்கலாம்.
அதேபோல சூரியனை தரிசித்து வணங்கலாம்.. சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கூட அந்த திசையை பார்த்து வேண்டிக் கொள்ளலாம். சூரியன் போலவே, தாமரைப் பூ, சந்தனம், கடல் போன்ற இயற்கை காட்சிகளில் கண் விழிக்கலாம்.. அதற்காக ஆக்ரோஷமாக எழும் கடல் அலைகள், பற்றி எரியும் நெருப்பு போன்றவற்றை பார்க்கவே கூடாது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
சிவலிங்கம், ராஜகோபுரம் , பசுமாடு, வாசம் மிக்க பூக்கள், பூந்தோட்டம் போன்றவற்றையும் பார்க்கலாம். இதில் கோபுர தரிசனம் வசதி இருந்தால் கட்டாயம் அதில் கண்விழிக்கலாம். காரணம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்...
இசைக்கருவிகள், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை காலையில் காண்பதாலும் அன்றைய நாள் நன்றாக அமையும்... அதேபோல, வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் வைத்திருப்பவர்கள் இரவு தூங்கும் முன்பு, அவைகளை அருகில் வைத்து விட்டு தூங்கி, மறுநாள் காலையில் எழுந்தவுடன் அவைகளை பார்த்தால் நல்லது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications