தூதுவளை தூதுவனின் தூபம்.. துயரம் தீர்க்கும் தூதுவளை இலை பரிகாரம்! வீட்டில் மகிழ்ச்சி, நன்மை பொங்கும்
சென்னை: இறைவனுக்கு தூது செல்லக்கூடிய சக்தி, தூதுவளைக் கீரைக்கு உண்டு என்பார்கள்.. அந்தவகையில், தூதுவளையை எப்படி பயன்படுத்த வேண்டும்? தூதுவளை பொடியால் குடும்பத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தூதுவளையை பொறுத்தவரை, மிகசிறந்த ஆண்டிபயாடிக் மூலிகையாகும்.. இதன் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்துவந்தால், சளி, காய்ச்சல் நெருங்காது.

மருத்துவ குணம்: இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, அதில், சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்கும்போது, சளி, இருமல் குணமாகும். கெட்ட கழிவுகளும் நீங்கும். நரம்புத் தளர்ச்சி பாதிப்புள்ளவர்களுக்கு இந்த தூதுவளை சிறந்த மருந்து.. ஆண்மை குறைபாடுகளை நீக்குவதில் பிரதானமானது.
ரத்த சோகையை தீர்க்கக்கூடிய இந்த தூதுளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது.. இந்த இலையின் சாற்றில் தேன் கலந்து குடித்தால், நுரையீரல் தொற்று, ஆஸ்துமாவுக்கு தீர்வு கிடைக்கும். கண் கோளாறுகளும் நெருங்காது. தூதுவளை பூக்கள், மொட்டுக்களை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பாலில் குடித்து வருவதால், கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
முக்கியத்துவம்: இத்தனை மருத்துவ குணம் இருந்தாலும் ஆன்மீகத்திலும் தூதுவளைக்கு முக்கிய இடமுண்டு.. தினமும் காலையில் குளித்து முடித்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு அருகில் ஒரே ஒரு தூதுவளை இலையை வைத்துவிட வேண்டும். தூதுவளைக் கீரையை உங்கள் கையில் வைத்து கொண்டு, உங்களது மனக்குறை, வேண்டுதல், கோரிக்கை எதுவானாலும் இறைவனிடம் சொல்லி வரலாம்.
உங்கள் வேண்டுதல் முடிந்ததுமே, கையிலிருக்கும் தூதுவளை இலையை, இறைவனின் பாதங்களில் வைத்து விட வேண்டும். மறுநாள் இதேபோல செய்யும்போது, புதிய தூதுவளை இலையை பயன்படுத்த வேண்டும். தினமும் இப்படி வேண்டுதலை சொல்லி, இறைவனின் பாதத்தில் வைக்கும்போது, அது இறைவனிடம் கொண்டு செல்லும் தூதாக கருதப்படுகிறது. இப்படி 48 நாட்கள் செய்யும்போது, மிகப்பெரிய மாற்றம் உங்கள் வாழ்க்கையில் வரலாம்.
சாம்பிராணி: அதேபோல, சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும் என்பார்கள். இதற்காக வீட்டில் தடைப்பட்டிருக்கும் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க வேண்டுமானால், தூபத்தில் துளசி விதைகளையும், தூதுவளை பொடியையும் போட்டு, அந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இதனால், உங்களுடைய குல தெய்வம், உங்கள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, தூதுவளை இலையை காய வைத்து பவுடர் செய்து, அதில் தூபம் போடும்போது தெய்வ நிந்தனைகளிலிருந்தும், முன்னோர்களின் சாபத்திலிருந்தும் விடுபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications