கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்ட வசம்பு.. வீட்டில் 1 வெள்ளி நாணயம் போதுமே.. மகிழ்ச்சி, நலன் பெருகும்
சென்னை: வீட்டிலுள்ள வறுமை நிலை ஒழிந்து செல்வம் தழைத்தோங்கவும், பாசிட்டிவ் எனர்ஜி வீடெல்லாம் பரவவும், வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடங்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.. வீட்டின் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்களகரமான பொருட்களை நிலையாக வைத்திருந்தாலே, பாதி பிரச்சனையை சமாளிக்க முடியும். இத்துடன் சில எளிய பரிகாரங்களை செய்தால், விரைவில் நன்மைகள் பிறக்கும் என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யக்கூடிய பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வைத்திருக்க வேண்டும். இதனால், குடும்பம் வறுமையிலிருந்து தப்பித்து, நிரந்தரமான பண வரவையும் பெருக்கலாம்.

கல் உப்பு மகிமை
இதில் வசம்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.. மண் பானை ஒன்றில் கல் உப்பு நிரப்பி, அதற்குள் ஒரு துண்டு வசம்பு போட்டு, அதற்கு மேலும் கல் உப்பு கொட்டி மூடிவிட வேண்டும். இப்பானையில் 520 என்ற நம்பரை மேல்புறத்திலும், 741 என்று நம்பரை கீழ்புறத்திலும் எழுதி, ஒருவர் கண்ணிலும் படாதவாறு பூஜை அறையிலுள்ள சாமி படங்களுக்கு பின்பக்கமாக மறைத்துவிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் இப்பானையை வெளியே எடுத்து, அதிலுள்ள உப்பு, வசம்பு 2 பொருட்களையும் எடுத்துவிட்டு, வேறு புதிய, கல் உப்பு மாற்றிவிட்டு, மீண்டும் யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துவிட வேண்டும். இதனால், நிதிச்சிக்கல் தீர்ந்து, பணம் தடையின்றி குடும்பத்துக்குள் வரும் என்பது நம்பிக்கையாகும்.
ஆறு வெற்றிலைகள், மூன்று பாக்குகள்
அதேபோல, வீட்டில் பணம் போட்டு வைக்கும் பணப் பெட்டியை தென்மேற்கு மூலையில் வைத்து, அதன்மீது சிறிது மல்லிப்பூவையும் தூவி வரும்போது பணத்துக்கு பஞ்சம் வராது.. அல்லது, பணப்பெட்டி, பீரோவில் ஆறு வெற்றிலைகள், மூன்று பாக்கு சேர்த்து வைக்கலாம். அல்லது லவங்கப்பட்டையை அரைத்து தூள் செய்து, பச்சை கலர் துணியில் மடித்து, பச்சை நூலால் கட்டி, பணப்பை அல்லது பர்ஸில் வைத்தாலும் பணம் குறைவின்றி சேர துவங்கும்.
அதேபோல, பணப்பெட்டிக்குள் ஒரு ரூபாய் நாணயத்தையும் போட்டு வைக்கலாம். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருளை பீரோவில் வைத்தால் செல்வம் தங்கி நிற்கும்.
வெள்ளி நாணயத்தின் மதிப்பு
பூஜை அறையில், வெள்ளி நாணயம் ஒன்றை வைத்திருக்கலாம்.. இது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தி பிடிக்கும்.. அத்துடன் நேர்மறையான ஆற்றலை வெளியிடும் தன்மை கொண்டது வெள்ளி நாணயங்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு..
எனவே, வெள்ளி நாணயத்தை, பூஜையறையின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். ஒருவேளை நாணயத்தை வாங்க வேண்டுமானால், வெள்ளி கிழமை வாங்கலாம்.. உபயோகிக்கும் முன்பு அந்த நாணயத்தை சுத்தம் செய்து, அதற்கு பிறகே பூஜை அறையில், மேல்நோக்கி வைக்க வேண்டுமாம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications