தானாகவே விளக்கு அணைவது கெட்ட சகுனமா? வீட்டின் பூஜையறையில் தீபம் இப்படித்தான் அணைக்க வேண்டுமாம்
சென்னை: வீடுகளில் விளக்கேற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? தீபம் ஏற்றும்போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன? பூஜையில் விளக்கு தானாக அணைந்துவிட்டால் அபசகுணமா? பூஜை முடிந்ததுமே விளக்கை அணையலாமா? விளக்கேற்றும்போது வீட்டின் பூஜையறையில் மட்டும் ஏற்றலாமா? இவைகளை குறித்தெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வீட்டில் விளக்கேற்றினால் மனம் அமைதியடையும்.. விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் வீட்டிற்குள் கிடைக்கும்... அதாவது இழந்த நிம்மதி, இழந்த சொத்துக்களையும் மீட்க முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

எப்போது வீட்டில் காலையிலோ, மாலை நேரத்திலோ தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்... துன்பங்கள் நீங்கும். அதிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுவது இரட்டிப்பு பலனை தரும்.
வீட்டில் எப்போது விளக்கேற்றலாம்
ஆனால் சிலர் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விளக்கேற்றுகிறார்கள்.. எல்லா நாட்களிலுமே விளக்கேற்றினால் நல்லது.. அதேபோல பூஜையறையில் மட்டுமே ஏற்றுவதைவிட்டுடிவிட்டு, நடு முற்றம், சமையலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றி வைக்கலாம்.
இதில், மாலையில் நடுமுற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால், குடும்பத்தை சுற்றியிருக்கும் வறுமை, தரித்திரம் நீங்கும் என்பார்கள்.
விளக்கேற்றும்போது கிழக்கு திசையிலுள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் துன்பம் தீருமாம்.. மேற்கு திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் கடன் தொல்லை தீரும்.. வட திசையிலுள்ள முகத்தை ஏற்றினால் அனைத்து செல்வமும் கிடைக்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு திசையிலுள்ள முகத்தை எப்போதுமே ஏற்றக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அகல் விளக்கு முக்கியம்
விளக்கை நேரடியாக தீப்பெட்டியில் ஏற்றாமல், அகல் விளக்கு அல்லது ஊதுபத்தியில் பற்ற வைத்துவிட்டு, அதனை கொண்டு பூஜையறையில் விளக்கேற்றலாம்.. விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டால், அந்த எண்ணெய்யை இன்னொரு விளக்குக்கு ஊற்ற கூடாது.. சுத்தம் செய்யப்படட் விளக்கிற்கு, பழைய எண்ணெய், பழைய திரியை பயன்படத்தக்கூடாது..
எப்போதுமே விளக்கேற்றும்போது, அதிலுள்ள எண்ணெய் முழுவதும் தீர்ந்துவிடும் அளவுக்கு விடக்கூடாது.. எண்ணெய் சுத்தமாக இல்லாமல், திரியை கருக விடக்கூடாது. அதேபோல ஏற்றி வைக்கும் விளக்கு, தானாகவே அணைந்துவிடக்கூடாது. பூஜை முடிந்ததும் சிறிது நேரம் விளக்கை எரிய விட வேண்டும்..
தீபத்தின் திரி அவசியம்
பிறகு விளக்கு திரியின் அடிப்பகுதியை "ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று சொல்லி, பின்பக்கமாக இழுத்து, தீச்சுடரை குறைத்தால் விளக்கு அணைந்துவிடும். அல்லது பூக்களை கொண்டு தீபத்தை அணைக்கலாம். இனிப்பான கற்கண்டு, மாதுளை பழக்குச்சி, நெல்லிக்காய் குச்சு, மருதாணி குச்சி போன்ற ஏதாவது ஒன்றை வைத்தும் தீபத்தை குளிர வைக்கலாம். ஆனால் வாயால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது.
விளக்கை அணை, விளக்கை அணைக்கிறேன் என்றெல்லாம் சொல்லாமல் விளக்கை மலையேற்றுகிறேன், தீபத்தை குளிர் வைக்கிறேன் என்று சொல்வது மங்கலகரமான வார்த்தையாகும். அதேபோல திரியை தூண்டுவதானாலும், வெறும் கைகளால் தூண்டக் கூடாது.
தானாக விளக்கு அணைந்தால்?
கடவுளுக்கு ஏற்றி வைக்கும் விளக்கானது, திடீரென நின்று விட்டாலோ அல்லது தீபம் திடீரென அணைந்துவிட்டாலோ அது கெட்ட சகுனமாக சிலர் கருதுகிறார்கள்..
விளக்கு திடீரென அணைய பல காரணங்கள் இருக்கலாம்.. காற்றின் வேகத்தால் தீபம் அணையலாம், அல்லது விளக்கில் எண்ணெய் குறைந்து அணையலாம்.. திரி சரியில்லாமல் அணையலாம். இதுபோன்ற காரணங்கள் இருந்தால் அதனை சரி செய்யலாமே தவிர, கெட்ட சகுனம் என்று மனம் வேதனைப்படக்கூடாது என்கிறார்கள் ஜோதிடர்கள்.
விளக்கு அணைந்தது பற்றியே மனம் சஞ்சலப்பட்டு கொண்டிருந்தால், அருகிலுள்ள கோவிலுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அர்ச்சனை செய்துவிடலாம். இதனால் சஞ்சலமும் கலக்கமும் நீங்கி மனம் அமைதி பெறும்.












Click it and Unblock the Notifications