Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலையணை மந்திரம்..நீங்கள் செய்யும் இந்த ஒரு பரிகாரம்..வாழ்க்கை துணையை வசியப்படுத்தும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மனைவி என் பேச்சை கேட்பதே இல்லை என்று சில கணவர்கள் சொல்வார்கள். அதே போல என் கணவர் என்னுடைய பேச்சை கேட்பது இல்லை என்று இல்லத்தரசிகள் புலம்புவார்கள். அவர்களுக்கு எளிமையான ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வாழ்க்கை துணை நீங்கள் சொன்ன பேச்சை கேட்க வேண்டுமா? நல்ல விசயத்திற்காக இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலிக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் சோம்புக்கு நிச்சயம் இடம் உண்டு. பச்சை நிற அந்த பொருள் ஆன்மீக பரிகாரத்திற்கு ஏற்றது. சோம்பின் வாசனை பணத்தை ஈர்க்கும். நிறைய பண வரவுக்கு சோம்பு உதவி செய்யும். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி சோம்புக்கு உள்ளது. அது எப்படி என்று பார்க்கலாம்.

Spirituality news Tamil: Thalayanai mantram Do this one remedy will charm life partner

முன்பெல்லாம் தலையணை மந்திரம் என்ற வார்த்தையை குடும்பத்தில் அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள். இன்றைக்கு என்ன மந்திரம் போட்டாலும் கேட்காத வாழ்க்கைத்துணைதான் வாய்க்கிறது. யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைதான் உள்ளது. மனைவியின் சொல் பேச்சை ஒரு போதும் கேட்காத கணவரை கூட, மனைவி சொல்வதை மட்டும் கேட்க வைக்க 1 ஸ்பூன் சோம்பு போதும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

இன்றைக்கு அனைவரின் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலும் சோம்பு இருக்கும். நாம் தினம்தோறும்‌ காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்து உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு வேண்டுங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தினமும் 1 ஸ்பூன் சோம்பு இருந்தால் போதும்.

மனைவி இந்த பரிகாரத்தை செய்யும் போது ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, உங்களுடைய கணவரின் பெயரை 11 முறை சொல்லி விட்டு, உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் மனதார, உண்மையாக பிரார்த்தனை செய்து, அதன் பின்பு இந்த சோம்பை அப்படியே சமையலில் சாம்பார் அல்லது பொரியலில் போட்டு சமைத்து உங்கள் கணவருக்கு கொடுத்து விடுங்கள். 11 நாளும் நீங்கள் இதை செய்ய வேண்டும். இதை கணவருக்கு தெரியாமல் செய்யலாம் தவறு கிடையாது.

Spirituality news Tamil: Thalayanai mantram Do this one remedy will charm life partner

சிலரது கணவர் மதுவிற்கு அடிமையாகி இருப்பார். மனைவி என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். அதே போல சிலரது மனைவி மொபைல் போனுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடுவார். அவர்களுக்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள சோம்பு வைத்து செய்யும் பரிகாரத்தால் அதிகம் செலவாகாது.

ஆண்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்வது கொஞ்சம் சிரமம் என்றாலும் முயற்சி செய்யலாம். வலது கையில் ஒரு ஸ்பூன் சோம்பை வைத்துக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய மனைவியின் பெயரை 11 முறை உச்சரித்து இந்த சோம்பை எரிகின்ற நெருப்பில் போட்டு விடுங்கள். அந்தப் புகையில் இருந்து வரும் வாசத்தை உங்களுடைய மனைவி சுவாசித்தால் போதும். அப்புறம் என்ன நீங்க சொல்ற பேச்சை அவங்க தட்டவே மாட்டாங்க.

பொதுவாகவே வசியம் செய்வது, சொன்ன பேச்சை கேட்பதற்காக செய்யும் பரிகாரங்கள் எல்லாமே நல்ல விசயத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் தொழில் போட்டியில் மாந்திரீகம் செய்வது மருந்து வைப்பது என மந்திரவாதிகளை வைத்து சில பரிகாரம் செய்வார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல ஒருவருடைய வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று செய்யும் மாந்திரீக பரிகாரங்கள் செய்பவர்களுக்கே கேடாக முடிந்து விடும். எனவே இது கணவன் மனைவி ஒற்றுமைக்காக மட்டுமே சொல்லப்பட்ட பரிகாரம் தவறான விசயத்திற்கு உபயோகப்படுத்தினால் அது பலிக்காது அப்புறம் கம்பெனி பொறுப்பேற்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+