கோவிலுக்கு சாமி கும்பிட போறீங்களா.. மறந்தும் கூட இந்த 10 தவறுகளை செய்து விடாதீர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணம் போல வாழ்க்கை என்று சொல்வார்கள். நல்ல எண்ணங்கள் இருந்தால் செயல்கள் சிறப்பாக இருக்கும். நாம் பேசும் வார்த்தைகளும், எண்ணமும் நல்லதாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் நல்லதாகவே இருக்கும். கோவிலுக்கு சாமி கும்பிட போகும் போது தூய்மையான பக்தியுடன் செல்ல வேண்டும். . கோவிலுக்குள் தப்பி தவறியும் சில தவறுகளை செய்து விடாதீர்கள் என்று இந்து தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இறை சிந்தனை: மனக்குறைகள் நீங்கவே நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கே போய் எதையாவது பேசி யாருடனாவது சண்டை போட்டு மன உளைச்சலை அதிகரித்துக்கொள்ளக்கூடாது. கத்தி பேசக்கூடாது. அடுத்தவர்களைப் பற்றி குறை பேசக்கூடாது. இறை சிந்தனையோடு இறைவனின் நாமங்களை மட்டுமே உச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

Spirituality Tips: Dont do these things in Hindu Temple


கோபுர தரிசனம்: கோவில் பிரகாரத்தில் நுழையும் முன்பு நாம் கோபுர தரிசனத்தை செய்து விட்டு தான் நுழைய வேண்டும். அது போல் திரும்பி வரும் பொழுதும் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்.

சாஸ்திரம் சொல்வதென்ன: சிவ ஆலயம் சென்றால் நீங்கள் செல்வதானால் அங்கிருக்கும் நந்திதேவருக்கும், சிவனுக்கும் இடையில் எவ்வளவு இடம் இருந்தாலும் நாம் அந்த வழியாக நடந்து போகக் கூடாது. நிறைய பேர் இவற்றை சரியாக கடைப்பிடிப்பதில்லை. நந்தி தேவருக்கும், சிவனுக்கும் நடுவில் பக்தர்கள் நடந்து போவது மிகப்பெரிய பாவம் என சாஸ்திரம் சொல்கிறது. தெரியாமல் செய்திருந்தால் பரவாயில்லை. இனி தெரிந்தும் இந்த தவறை செய்யாதீர்கள். இவ்வாறு செய்வதால் நந்திதேவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நந்தியிடம் அனுமதி பெற்றுதான் சிவ தரிசனம் செய்ய வேண்டும்.

எப்படி வணங்குவது: கோவிலுக்கு போய் விளக்கு ஏற்ற வேண்டும். சன்னதி அடைக்கப்பட்ட பின்னரோ, விளக்குகள் எரியாத நிலையிலோ கோவிலுக்கு போய் வணங்கக் கூடாது. சாமி தரிசனம் செய்யும் பொழுது ஒரு கையை வைத்து மட்டும் ஆரத்தியை தொட்டு வணங்கக் கூடாது. ஒரு சிலர் கைகளில் அர்ச்சனை கூடை, செல்போன் என ஏதாவது பூஜை பொருட்கள் வைத்துக் கொண்டு தரிசனம் செய்வார்கள். இது போல் கட்டாயம் செய்யவே கூடாது.

ஆரத்தி வழிபாடு: நீங்கள் கைகளில் எந்த பொருளை வைத்திருந்தாலும் அதை கீழே வைத்து விட்டு இரண்டு கைகளை சேர்த்து வைத்து வணங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டும். ஆரத்தியை இரண்டு கைகளால் மட்டுமே தொட்டு கண்களிலும் தலையிலும் ஒற்றிக்கொள்ள வேண்டும். அதே போல தீர்த்தம் கொடுத்தால் அதனை கீழே சிந்தாமல் வலது கையின் அடியில் இடது கையை வைத்து தீர்த்த பிரசாதத்தை பெற வேண்டும்.

தோஷம் ஏற்படும் செயல்: கோவிலில் இருக்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் ஆகியவற்றின் நிழல் தரையில் படும் பொழுது அதை தெரியாமல் கூட நாம் மிதித்து விடக் கூடாது. இந்த விஷயமும் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இவற்றின் நிழல்களை மிதிப்பவர்களுக்கு தோஷங்கள் ஏற்படும். இந்த நான்கு நிழல்களை மிதிக்காமல் சுற்றிக் கொண்டு செல்வது மிகவும் நல்லது.

இறை பிரசாதம்: கோவிலில் கொடுக்கும் விபூதி, குங்மத்தை நாம் நெற்றியில் பூசிக்கொண்டு மீதமிருந்தால் அதனை உடம்பில் பூசிக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. சிலரோ தூண்களிலும் சுவர்களிலும் கொட்டி விட்டு செல்வார்கள். அது தவறானது. பிரசாதம் என்பது இறைவனின் ஆசியோடு நமக்கு வழங்கப்படுகிறது. அதனை நாம் உதாசீனப்படுத்துவது போல கோவிலிலேயே விட்டு விட்டு செல்லக்கூடாது. நம்முடை வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜை அறையில் வைத்து தினசரியும் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கால்களை கழுவாதீர்கள்: கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களை நாம் கருவறைக்கு அருகில் நின்று சாப்பிடக்கூடாது. கொடிமரத்தை விட்டு வெளியே வந்துதான் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு விட்டு கைகளை கழுவலாம். கால்களை கழுவக்கூடாது. வீட்டிற்கு சென்றதும் உடனே காலை கழுவி விடக்கூடாது. சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின்னர் தான் கை, கால்களை கழுவ வேண்டும்.

கோவிலுக்குள் உறக்கம்: கோவிலுக்குள் சிலர் உறங்குவார்கள். அது தவறான செயல். நீண்டதூரம் பயணம் செய்து வந்து அசதியாக இருந்தாலோ, நடை அடைக்கப்பட்டு இருந்தாலோ கோவில் கொடி மரத்தை தாண்டி உள்ள மண்டபங்களில் சிறிது நேரம் கண் அயரலாம் தவறில்லை.

செல்போன் வீடியோ: கோவிலுக்குள் செல்போனின் புகைப்படம், வீடியோ எடுக்கக் கூடாது என்று விதிகள் இருந்தாலும் எத்தனையோ பேர் தங்களின் கைகளில் செல்போனை வைத்து வீடியோ எடுப்பதை வழங்கமாக வைத்திருக்கின்றனர் இது தவறானது. இதே போல கோவிலுக்குள் போய்தான் செல்போனில் சத்தமாக பேசுவார்கள். ஆலய தரிசனத்திற்கு செல்பவர்கள் கூடுமான வரைக்கும் செல்போனை அறைகளில் வைத்து விட்டு செல்வது நல்லது. இப்படி பல சாஸ்திரங்கள் உள்ளன. இதனை கடைபிடித்து வணங்கினால் இறைவனின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+