ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை ரேவதி தேரோட்டம்..விண்ணை எட்டிய ரங்கா ரங்கா முழக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் விருப்பன் திருநாளாக 11 நாட்கள் நடைபெறுகிறது. ரங்கநாதர் பிறந்தது சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டியே சித்திரை ரேவதியில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விருப்பன் திருநாள் விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், யாளி வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருடவாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.17 ம் தேதி நெல்லளவு கண்டருளினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது.
எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் அணிந்த மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் கோவில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினர். இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர், கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மீனாட்சி, சரண்யா, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடிவு, கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்க சித்திரை வீதியில் தேர் உலா வந்தது.லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.
தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications