கழுத்தில் இரட்டை சங்கிலி அணியும் பெண்களா நீங்க? அதிர்ஷ்டம் கொட்டுமாமே.. வீட்டில் இதை ட்ரை பண்ணுங்க
சென்னை: பெண்கள் நினைத்தால் வீட்டை கோயிலாக மாற்றிவிட முடியும்.. எனினும் தெரியாமல் செய்யும் ஒருசில செயல்களால் இன்னல்கள் சூழ்ந்துவிடும்.. பிறரது கண்திருஷ்டி, பொறாமை உள்ளிட்ட காரணங்களால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளும் சூழ்ந்துவிடும்.. இதுபோன்ற நேரங்களில், ஒருசில விஷயங்களில் கவனத்தை செலுத்தினாலே போதும்.. சூழ்ந்து காணப்படும் சிக்கல்கள் பறந்துவிடும். இதில் சிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.
வீட்டில் எப்போதுமே பாசிட்டிவ் ஆற்றல் நிலைத்திருக்க வேண்டுமானால், பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமமிட வேண்டும்.. இதனால், லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கியிருந்து அருள் புரிவாள்.

வாசலில் மஞ்சள் துணி
அதேபோல பணக்கஷ்டத்தில் சிக்கி தவிப்பவர்கள், ஒரு பருத்தி துணியை மஞ்சளில் தோய்த்து வைத்து கொள்ள வேண்டும். பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட தேங்காயை, அந்த மஞ்சள் துணியில் வைத்து, அதில் சிறிது நாணயங்களையும் வைத்து கட்டி, முடிச்சு போல கட்டி வீட்டின் வாசற்படியில் கட்டிவிட வேண்டும். இதனால் பொருளாதார பிரச்சனை சீராகும் என்பது நம்பிக்கையாகும்.
திருமணமான பெண்கள் கழுத்தில் ஒரு சரடு சங்கிலி அணிந்திருப்பார்கள். சிலர், 2 செயின்களை அதாவது, பெரிய செயின் அணிந்திருந்தாலும், துணை செயின் ஒன்றினை அணிந்திருப்பார்கள். இப்படி அணிவது பெண்களுக்கு அதிர்ஷ்டம் தருமாம்.
இரட்டை செயினுக்கு அதிர்ஷ்டம்
அதிலும், ஒரே ஒரு சரடு அணிந்திருக்கக்கூடிய பெண்கள் கழுத்தில் கூடுதலாக இன்னொரு செயின் அணிவதால், அப்பெண்ணின் மனதில் துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகரித்து காணப்படுமாம்.
அந்த அளவுக்கு உள் கழுத்தில் அணியக்கூடிய அந்த அணிகலனுக்கு தனிச்சிறப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதற்காக துணை செயினை, தங்கத்தில்தான் அணிய வேண்டும் என்றில்லை.. வெள்ளி, செம்பு, முத்துமாலை இப்படி அணிந்து கொள்ளலாம்.. இதனால், கூடுதல் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.
48 நாளில் நடக்கும்
அதேபோல, வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு மல்லிகை பூ சாற்றி வழிபாடு செய்து கொள்ள வேண்டும். நெய்வேதியம் வைத்து, கொள்ள வேண்டும்.. பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரில், மீனாட்சிக்கு உகந்த பச்சை நிறத்தில், பிள்ளையார் சுழி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது உங்களது பிரச்சனை என்ன என்பதை அதில் 27 முறை எழுதி கொள்ள வேண்டும்.
பணக்கஷ்டம், தீராத நோய், குழந்தை பாக்கியம் என எதுவானாலும் அதில் எழுதலாம். இந்த பேப்பரை பூஜையறையில் அம்பாளின் பாதத்தில் வைத்து, மனமுருக பிரார்த்தி கொள்ள வேண்டும். இறுதியாக ஆரத்தி காட்டி பூஜையை முடித்து கொண்டு, அந்த பேப்பரை பத்திரமாக எங்காவது எடுத்து வைத்து விட வேண்டும்.. இதனால், 48 நாளில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் கோரிக்கையை அம்பாள் நிறைவேற்றிவிட்டால், அந்த பேப்பரை நெருப்பில் போட்டு எரித்து, நீர் ஊற்றி விடலாம்.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications