இழந்த சொத்தை 21 நாளில் பெறணுமா? இலுப்பை எண்ணெய், தாமரை தண்டு திரி போதுமே.. சூப்பர் பரிகாரம் பாருங்க
சென்னை: பணம், நகைகள் உள்ளிட்ட செல்வத்தை எவ்வளவுதான் சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடும் சூழலும் வந்துவிடுகிறது.. கைவிட்டு போய்விட்டால் அவ்வளவுதான் என்று சிலர் நினைக்கிறார்கள்.. இழந்ததை மீட்க முடியாது என்றும் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.. ஆனால் கடவுளை பூஜித்தால் இழந்த செல்வத்தை மீட்கலாம்.. நம்பிக்கையுடன் பிரார்த்திக்கும்போது, இழந்தது மட்டுமல்ல, இரட்டிப்பாகவே உங்களது கைக்கு வந்து சேரும்.
இழந்த பொருட்களை மீட்க வேண்டுமானால் சில எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.. குறிப்பாக, வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகளில் காலையில் விளக்கு போட வேண்டும்..

இழந்த சொத்துக்களை மீட்க பரிகாரம்
குறிப்பாக, மண் அகலில் கருநீல துணியில், வெண்கடுகை சேர்த்து முடிந்து கொண்டு, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இழந்த பொருள் நகை, சொத்து, பணம், புகழ் எதுவானாலும், மீண்டும் கைக்கு வந்து சேர வேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்ளலாம்.
காலை அல்லது மாலை நேரத்தில் இலந்தை மரத்திடம் பிரார்த்தித்து 7 முறை சுற்றி வரவேண்டும். பிறகு, 7 ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வரலாம்.. அதேபோல, தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.. ஏனென்றால், செல்வ வளங்களை வழங்குவதற்கும், நன்வழியில் வாழவைப்பதற்கும் பைரவர் துணை நிற்கக்கூடியவர்..
இலுப்பெண்ணெய் விளக்கு
அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி தேவிக்கு விரதமிருந்து வணங்கினாலும் இழந்த செல்வத்தை பெறலாம். சண்டிகேஸ்வரரை பிரார்த்தனை செய்து வருவதாலும், கைவிட்டு போனதை மீண்டும் கிடைக்கப் பெறலாம்.
தாமரை தண்டு திரியை கொண்டு விளக்கேற்றுவதும் பலனை தரும்.. இதற்கு விடிகாலையில் குளித்துவிட்டு, பூஜைைறயில் 2 மண் அகல் விளக்குகளுக்கு இலுப்பெண்ணை ஊற்றி, தாமரை தண்டு திரியை ஏற்ற வேண்டும். கைவிட்டு போன செல்வம், புகழ், பணம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும. பெண்கள் 21 நாட்களுக்கும், ஆண்கள் 48 நாட்களுக்கும் இந்த விளக்கை ஏற்றி வந்தால் விரைவில் பலன் தெரியும்.
பஞ்ச தீப எண்ணெய்
பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய 5 வகையான பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட வேண்டும். வடக்கு பக்கம் நோக்கி, இந்த தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைப்பதுடன், இழந்த செல்வத்தையும் மீட்கலாம்.
அதேபோல, 27 பஞ்சமிகள், மாலை நேரத்தில் சிவன் சன்னதியில் சிகப்பு திரியில் மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.. இந்த பரிகாரம் செய்யும்போது அசைவம் தவிர்த்துவிடலாம்.












Click it and Unblock the Notifications