கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை.. ஒரே ஒரு கைப்பிடி பச்சரிசி போதுமே.. கடனில் விடுபடும் எளிய பரிகாரம்
சென்னை: உங்களுக்கு கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன்கள் சென்றுவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவதற்கான சில பரிகாரங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
பெரும்பாலும் கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. சொல்ல முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள்.

பெருமாள் கோயில்: இப்படி சிக்கல்களில் உள்ளவர்கள், பெருமாள் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வரவேண்டும்... இதுபோல் 12 வாரமும் துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், கடன் பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பார்கள்.
அல்லது ஒரு கைப்பிடி பாசிபருப்பு என்று சொல்லப்படும் சிறுபருப்பை வைத்தும் பரிகாரம் செய்யலாம். பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி, வெல்லம் ஒரு கைப்பிடி என இரண்டையுமே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி இரவு ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை இந்த ஊறிய பாசி பருப்பை பசு மாட்டிற்கு உங்கள் கையாலேயே தந்து, கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என்று கோமாதாவிடம் பிரார்த்தனை செய்தால் போதும்.. இப்படி தொடர்ந்து பசுமாட்டிற்கு பாசிப்பருப்பு தானம் செய்யும்போது, கடனிலிருந்து மீண்டுவர முடியும்..
பச்சரிசி: அல்லது ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து பசுவிற்கு தந்தால் கடன் தொல்லையிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம்.. வீட்டிற்குள் பணவரவும் தங்கு தடையின்றி வரும்.
அதேபோல,, உங்களால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவே முடியாத ஏற்படும்போதெல்லாம் மஞ்சள் பிள்ளையாரிடம் வேண்டுதலை விடுக்கலாம்..
மஞ்சள் பிள்ளையார்: அரச இலையில், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு குங்கும பொட்டு, பூ வைத்து, உங்கள் பூஜையறையில் வைத்து, தீபம் ஏற்ற வேண்டும். இப்போது ஒரு வெற்றிலையை எடுத்து, உங்களது கடன் தொகை எவ்வளவு என்பதை குறிப்பிட்டு, அந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும் எழுதிக்கொள்ள வேண்டும்.. பிறகு வெட்டிவேர் ஒரு துண்டு, நெல்மணி ஒரு ஸ்பூன், 2 அருகம்புல் போன்றவைகளை வெற்றிலையில் வைத்து, மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்துவிட வேண்டும்.
இப்போது பிள்ளையாருக்கு தீபாராதனை காண்பித்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. இப்படி வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வரவேண்டும்.
அரச வாழ்வு: ஒவ்வொரு முறையும் பழைய பொருட்களை நீக்கிவிட்டு, புதிய பொருட்களை வைத்து பூஜித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். அரச இலை பிள்ளையாரை மனமுருகி வேண்டும்போது, அரச வாழ்வினை அள்ளி அள்ளி கொடுக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...!!!












Click it and Unblock the Notifications