மீனம், கன்னி ராசிகளில் ராகு, கேது? நாமக்கல் நரசிம்மர் கோயிலுக்கு விழுந்தடித்து போன கூட்டம்.. அப்படியா

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோவிலில் இன்று காலையிலேயே பக்தர்கள் திரண்டு வந்துவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல, கோயிலுக்குள் அதிகாலையில் திரண்ட பக்தர்கள், சுமார் 1 மணி நேரம் தியானமும் செய்திருக்கிறார்கள். என்ன காரணம்?

நரசிம்மர் என்றதுமே, அஹோபிலம், யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி, சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா, சென்னபட்னா, சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள் கோயில், பரிக்கல், பூவரசன் குப்பம், சிங்கிரி, காட்டழகியசிங்கர் கோயில், நரசிங்கபுரம், கத்தாழம்பட்டுபோன்ற திருத்தலங்களே ஞாபகத்துக்கு வரும்.

spirituality namakkal

வழிபாடுகள்: இதில், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள்.. அதேபோல, கோவையிலும் லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. லட்சுமி நரசிம்மர் இந்த ஊரில் அவதரித்ததால்தான் நரசிம்மநாயக்கன்பாளையம் என்ற பெயரே இந்தப் பகுதிக்கு வந்ததாக சொல்வார்கள்..

எனினும், நரசிம்மர் கோயிலிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலாகும்.. இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்திருக்கிறது.. வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் இங்கு வீற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல, இங்குள்ள அரி நாமகிரித் தாயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

பில்லி, சூனியம்: நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை பூஜித்து வந்தால் சகல செல்வங்களும், பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. அதேபோல, ராகு, கேது தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மூலவர் அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி காரியங்கள் கைக்கூடும்.. திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக்கொண்டால், தோஷங்களும் உடனே நிவர்த்தியாகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த அளவுக்கு புகழ்வாய்ந்த நாமக்கல் நரசிம்மர் கோவிலில், இன்று காலையிலேயே திடீரென கூட்டம்கூடி பெரும் பரபரப்பை தந்துவிட்டது.. மார்கழி முதல் நாளான இன்று நரசிம்மர் கோவிலில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களோடு கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் அதிகாலை முதலே கூடிவிட்டார்கள்..

தியானம்: சூரிய உதயத்திற்கு பிறகு, பக்தர்கள் அனைவரும் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்கள். இதனால் கோயில்களின் நிர்வாகம் மிகுந்த குழப்பம் அடைந்தது. இதற்கு பிறகுதான் விஷயம் புரிந்தது.
அதாவது, சமூக வலைதள பக்கம் ஒன்றில் ஆன்மீக ஜோதிடர் பிரகு.பிரபாகரன் என்பவர், இன்றைய தினம் (16.12.24) மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள லஷ்மி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தாராம்.

திடீர் பரபரப்பு: இந்த பதிவு, சோஷியல்மீடியாவில் வைரலானதையடுத்து, பக்தர்களின் கவனத்தையும் பெற்றிருந்தது. எனவே, இன்று 16ம்தேதி காலையிலேயே பொதுமக்கள் திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்ததால், பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+