இறந்தவர்கள் வீட்டுக்கு வரப்போறாங்க.. இதையெல்லாம் கண்டிப்பாக செய்யணும்! தை அமாவாசை தரும் சிறப்புகள்
சென்னை: தை அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு முக்கிய நாளாகும்... நமக்கு ஆசி வழங்குவதற்காகவே முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள்.. எனவேதான், இந்த தை அமாவாசை, சில முக்கிய காரியங்களை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். அவை என்ன தெரியுமா?
தை அமாவாசை தினத்தில், வீட்டு வாசலில் முன்னோர்கள், எள்ளும், தண்ணீரும் பெறுவதற்காகவே காத்து கொண்டிருப்பார்களாம்.. எனவேதான் இந்த நாளில் முன்னோர்களுக்கு செய்யக் கூடிய தான தர்மங்கள், தர்ப்பணங்கள் அனைத்தும் நேரடியாக அவர்களை சென்றடையும் என்று நம்பப்படுகிறது.

எனவே, தை அமாவாசை தினத்தன்று, தாய் தந்தையர்கள் இல்லாதவர்கள், கட்டாயம் தலைக்கு குளித்து விட வேண்டும்... அதிலும், திதி தர்ப்பணம் தருபவர்கள், காலையிலேயே குளித்து முடித்து, தர்ப்பணம் காரியங்களை முடித்தபிறகுதான், காபி டீ குடிக்க வேண்டும்..
படையல்: இதில் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், அல்லது உடல்நலிவுற்றவர்கள், காபி குடித்துவிட்டு, திதி தர்ப்பணம் காரியங்களை மேற்கொள்ளலாம். ஆனால், படையல் போட்டுவிட்டுதான் உணவு சாப்பிட வேண்டும்..
அதேபோல, எறும்பு, பசு, காகம், நாய், பூனை, அந்தணர்களுக்கு உணவளிக்கலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். முக்கியமாக, சாப்பாடு, கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, ஆடைகள் போன்றவற்றை தானம் தருவது, மிகச்சிறந்த புண்ணியமாக கருதப்படுகிறது. தை அமாவாசை தினத்தன்று மகாவிஷ்ணுவுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும்.. வீட்டிலுள்ள முன்னோர்களின் படங்களுக்கும் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்கலாம்.
தர்ப்பணம்: திதி கொடுப்பவர்கள், நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு சென்று, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் தர வேண்டும். ஒருவேளை நீர்நிலைகளுக்கு செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்துவிட்டு, பிறகு, அருகிலுள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்ந்து விடலாம்.
அதேபோல, வசதி இல்லாதவர்கள், அல்லது உடல் நலம் சரியில்லாதவர்கள் என்றாலும், மரத்தடியில் 3 முறை எள்ளும் நீரும் ஊற்றிவிட வேண்டும். இந்த தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிர செய்வதுடன், குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.
வழிபாடு: முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம் தந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து, முன்னோர்களின் படங்களை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசை பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சூட்ட வேண்டும். பிறகு, அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், அவர்களுக்கு பிடித்த பழம், இனிப்புகளையும் வைத்து, குத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
இந்த வழிபாடு முடிந்ததுமே, ஊறவைத்த கோதுமை தவிடு, அகத்திக் கீரையையும், தண்ணீரையும் பசுமாட்டிற்கு கையாலேயே சாப்பிட தர வேண்டும்.. படையலிட்ட பிறகு அதனை காகத்திற்கு வைக்க வேண்டும்.. இதனால் சனி பகவானின் ஆசி நமக்கு கிடைக்கும்.. எனவே, காகத்துக்கு உணவு வைத்து, அது சாப்பிட்ட பிறகே அனைவரும் சாப்பிட வேண்டும்.
தர்ப்பணம் எங்கே செய்யலாம்? நதிகள், கடல், புனித தீர்த்தங்கள், புண்ணிய தலங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவாரூர், பவானி கூடுதுறை போன்ற திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் நீர் நிலைக்குச் சென்று பித்ரு கடனை செய்யலாம்
தை அமாவாசை திதி நேரம் என்ன?
தை அமாவாசை 2025 திதி தொடக்க நேரம்: ஜனவரி 28, 2025 - 7:52 PM
தை அமாவாசை 2025 திதி முடியும் நேரம்: ஜனவரி 29, 2025 - 6:28 PM
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications