தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர்: சித்திரை தேரோட்டம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். நான்கு மாட வீதிகளில் வலம் வரும் திருத்தோரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அதன் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

சித்திரை திருவிழா ஆண்டு தோறும் 20 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். தற்போது 18 நாட்கள் நடைபெறுகிறது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்கர் மன்னர்கள், அவர்களை தொடர்ந்து மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. பல ஆண்டு காலம் தேரோட்டம் நடைபெறாமலேயே சித்திரை திருவிழா நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதன்மூலம் சித்திரை திருவிழாவும் புத்துயிர் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் 15ஆம் நாளன்று தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமி, அம்மன் வீதிஉலா 4 ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து பாரம்பரிய இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.
தியாகராஜசாமியும், கமலாம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications